தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 5ம் மாத நிகழ்வு லெட்சுமிகாந்தன் பாரதி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. படங்கள் இனியநண்பர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 5ம் மாத நிகழ்வு லெட்சுமிகாந்தன் பாரதி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் தென்னவன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். நிகழ்வில் எல்.கே.பி. நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வாசித்த புத்தகங்களை பகிர்ந்தனர். ஹைக்கூ கவிஞர் இரா. இரவி அவர்களின் மின்னல் ஹைக்கூ நூலினை மாணவி ரா.கோபிகாஸ்ரீ அறிமுகம் செய்தார் என்று தான் கூற. தசி எகச செயலாளர் நல்லாசிரியர் மு. சுலைகா பானு அவர்கள் நூல் மதிப்புரையாற்ற ஏற்புரையை கவிஞர் இரா. இரவி அவர்கள் ஆற்றினார்கள்.கவிஞர்கள் துளிர்,இரா.கணேசன் வாழ்த்துரை வழங்கினார்கள் பள்ளி குழந்தைகள் அனைவரும் உற்சாகமாக நிகழ்ச்சி கலந்து கொண்டார்கள்.நன்றியுரையினை தசிஎகச தலைவர் ச.நஜீமுதீன் அவர்கள் வழங்க நிகழ்சியினை ஆசிரியை சித்ரா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். படங்கள் இனியநண்பர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்./>















































































கருத்துகள்
கருத்துரையிடுக