படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! இனியநண்பர் புகைப்படக் கலைஞர்-இரா.குண அமுதன்.

இனியநண்பர் புகைப்படக் கலைஞர்-இரா.குண அமுதன். சுண்டல் சுற்றித் தருகிற செய்தித்தாள்கள் எப்போதுமே அற்புதங்களை நிகழ்த்திவிடுகின்றன. இன்றைய சுண்டல் காகிதத்தில் இருந்தது இரவீந்திரநாத் தாகூரைக் குறித்த கட்டுரையின் ஒருபகுதி! இரவீந்திரநாத் தாகூரின் தாத்தா துவாரகாநாத் தாகூர், சனாதனத்திற்கு எதிராக இராஜாராம் மோகன்ராயுடன் இணைந்து துவங்கிய 'பிரம்ம சமாஜம்' இயக்கத்தை அவரது தந்தை தேவேந்திரநாத் தாகூர் வழிநடத்தியதை தர்க்கரீதியாக அலசியிருந்தது அந்தக் கட்டுரை. இரவீந்திரநாத் தாகூர் சென்னை வந்தபோது அடையாறு தியோசபிகல் சொசைட்டியில் தங்கியிருக்கிறார். ராயப்பேட்டை மிட்லேண்ட் திரையரங்கில் படம் பார்த்திருக்கிறார்.ராணிமேரி கல்லூரியில் உரையாற்றியிருக்கிறார். பாரிமுனையில் கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார். தமிழகத்திற்கும் அவருக்குமான உறவு ஆச்சரியம் தருகிறது. இந்தியாவிற்கு ' ஜன கண மன ', வங்க தேசத்திற்கு ' அமர் சொனார் பாங்ளா ', இலங்கைக்கு ' ஸ்ரீ லங்கா மாதா ' என தேசியகீதங்களைத் தந்திருக்கிறார். வரலாற்றின் அரிய மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டு நிகழ்கால அரசியலை அணுக முடியாது என்பதே உண்மை! இனியநண்பர் புகைப்படக் கலைஞர்-இரா.குண அமுதன்.

கருத்துகள்