படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் கூடாது." - உச்சநீதிமன்றம் தீர்ப்பு! ➤ மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 14 கேள்விகளை அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ➤ "மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்." ➤ "ஆளுநர் காரணத்தை தெரிவிக்காமல் நீண்டகாலம் மசோதாவை நிறுத்திவைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது." ➤ "ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம், அல்லது சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கலாம் என்பன மட்டுமே." ➤ "ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்றால், சம்பந்தப்பட்ட மாநில அரசு நீதிமன்றத்தை நாடலாம்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள்