நூல் அறிமுகம் மற்றும் வாழ்த்துரைக் கூட்டம் .மதுரை வாசகர் வட்டம் சார்பில் ஹைக்கூ கவிஞர் இரா. இரவி எழுதிய "மின்னல் ஹைக்கூ" கவிதை நூலை அறிமுகப்படுத்தி வாழ்த்துரை வழங்கும் கூட்டம்
நூல் அறிமுகம் மற்றும் வாழ்த்துரைக் கூட்டம் 23.11.2025
மதுரை வாசகர் வட்டம் சார்பில் ஹைக்கூ கவிஞர் இரா. இரவி எழுதிய "மின்னல் ஹைக்கூ" கவிதை நூலை அறிமுகப்படுத்தி வாழ்த்துரை வழங்கும் கூட்டம் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. எழுத்தாளர் பா. சண்முகவேலு கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நூலின் சிறப்புகளை எடுத்துரைத்தார். முன்னிலை வகித்த பேரா. ஜி. ராமமூர்த்தி, கவிஞர் இரவி அவர்கள் ஓயாது இயங்கி தனது 35 - ஆவது நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் காதல், இயற்கை, குடும்பம், மனிதம், மூடநம்பிக்கை, வறுமை, தமிழின் சிறப்பு பற்றி பேசுகிறது என்றார்.
பட்டிமன்ற நடுவர் முனைவர் சண்முக திருக்குமரன் தனது வாழ்த்துரையில் இரவியின் கவிதைகள் உயிர்ப்புடன் உள்ளதாகக் கூறினார். தலைமை ஆசிரியர் ஷேக் நபி இரவியின் நூல், கவிதை எழுதும் ஆர்வலர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்றார். கவிஞர் யாழ்க்கோ, நூலின் உள்ளடக்கத்தை ஆய்வு நோக்கத்தில் விமர்சித்தார். கவிஞர் மு. முருகேசன், இரவியின் இடையறாத முயற்சி மற்றும் கவிதை புனைவதில் ஆர்வம் பற்றி கூறி, அவர் இன்னும் 100 நூல்களுக்கும் மேல் எழுத வேண்டும் என்று வாழ்த்தினார். மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் செந்தூரன் பேசுகையில், இரவி தேனீ போல் சுறுசுறுப்பாக இயங்கி 1000 - கணக்கான கவிதைகளைப் படைத்தவர். ஹைக்கூ கவிதையில் சிகரம் தொட்டவர் என்றார். மேலும், தியாகராசர் கல்லூரி பேரா. காந்திதுரை, ஆசிரியர் சிவசத்யா போன்றோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஒத்தக்கடை பொது நூலக வாசகர் வட்ட தலைவர் மற்றும் மதுரை வாசகர் வட்ட உறுப்பினர் முனைவர் முத்துமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த வாசகர் வட்டத் தலைவர் என்ற விருது வழங்கியமைக்கும் கூட்டத்தில் பாராட்டு தெரிக்கப்பட்டது.
கவிஞர் இரா. இரவி ஏற்புரை வழங்க, வாசகர் ஜெயசீலன் நன்றி கூறினார். வாசகர்கள் ராமசாமி, பேரா . மருதப்பன் தியாகதீபம் பாலு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
படங்கள் இனியநண்பர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.



























































கருத்துகள்
கருத்துரையிடுக