( 29.11.2025) திருமங்கலம் பொறியாளர் க.சிவக்குமார் எழுதிய "திசை எட்டும் சிந்தனைகள்" எனும் நூல் வெளியீட்டு விழா திருமங்கலத்தில் நடைபெற்றது.

( 29.11.2025) திருமங்கலம் பொறியாளர் க.சிவக்குமார் எழுதிய "திசை எட்டும் சிந்தனைகள்" எனும் நூல் வெளியீட்டு விழா திருமங்கலத்தில் நடைபெற்றது. மாண்பமை க.பாலசுப்பிரமணியன் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அவர்கள் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் இணைஇயக்குநர் S.V.இராஜசேகரன் முன்னிலை வகித்தார்."திசை எட்டும் சிந்தனைகள்" எனும் இந்த நூலை தமிழ்ச்செம்மல். ஹைக்கூ கவிஞர் இரா.இரவி வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதல் நூலை பெற்றுக் கொண்ட இலக்கியப் பேரவை செயலாளர் சு.சங்கரன் மகிழ்வுரை வழங்கினார்.இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியக நிறுவனர் பார்த்தசாரதி, தொல்காப்பியர் மன்றத் தலைவர் இருளப்பன்,முன்னாள் மாவட்ட தலைமை‌ நூலகர் இளங்கோ, உதவும் உள்ளங்கள் தலைவர் இராஜேந்திரன், சமூக ஆர்வலர் ஆதிமூலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் பொறியாளர் சிவக்குமார் ஏற்புரையாற்றினார். முன்னதாக இறையன்பு‌ கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பொருளாளர் சக்கையா அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.கம்பன்‌ கழகப் பொருளாளர் பிரசன்னா T முருகன் நன்றியுரையாற்றினார்.இந்நூல் வெளியீட்டு விழாவில் 42 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் மற்றும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துக் கொண்டனர். படங்கள் இனியநண்பர் மதுரை உலா ரெ.கார்த்தி கேயன் கை வண்ணம்
jVNMUMfFV2koskN6nP3Pi1J9GSYlparsmEqM6sQ792BlhDH7uQsOWF3r2kiWt8lUpx3kTVzqznqSSzgkAk/s600/50.jpg"/>

கருத்துகள்