26.10.2025 " இருமொழி இருக்க ! மும்மொழி எதற்கு ? " சிந்தனைக் கவியரங்கம் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் & தொடக்கப் பள்ளியில் நடந்தது.

26.10.2025 " இருமொழி இருக்க ! மும்மொழி எதற்கு ? " சிந்தனைக் கவியரங்கம் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் & தொடக்கப் பள்ளியில் நடந்தது. " இருமொழி இருக்க! மும்மொழி எதற்கு ? " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.பேரவையின் தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார் . கவிஞர் அஞ்சூரியா க . செயராமன் அவர்கள் எழுதிய" தாத்தாவின் கவிதைகள்" நூலை பேராசிரியர் சக்திவேல் வெளியிட புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி..வரதராசன் அவர்கள் பெற்றுக் கொண்டு மதிப்புரை வழங்கினார் .நூலாசிரியருக்கு ஆதிசிவத் தென்னவன் பொன்னாடைப் போர்த்தி வீரபாண்டியத் தென்னவன் விருது வழங்கி வாழ்த்தினார் .நூலாசிரியரின் பேத்தி, பேரன்கள் உள்பட குடும்பத்தினர் வருகை தந்து சிறப்பித்தனர் . கவிஞர்கள் இரா.இரவி ,முனைவர் வரதராஜன் , இரா.கல்யாணசுந்தரம், கு .கி கங்காதரன், ,கி .கோ குறளடியான் , அ.அழகையா,மு .க .பரமசிவம், இளையாங்குடி மு .இதயத்துல்லா, லிங்கம்மாள், மா .முனியாண்டி, அஞ்சூரியா க . செயராமன் , பா.பழனி, அரங்க கிரிதரன் ஆகியோர் கவிதை பாடினார்கள். சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் கோபாலன் அவர்கள் சிறப்பாக கவிதை பாடிய குறளடியான் அவர்களுக்கும் ,யாவர் கல்லூரியின் தமிழ்த்து துறைத் தலைவர் பரந்தாமன் அவர்கள் சிறப்பாக கவிதை பாடிய இரா கலயாணசுந்தரம் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி தென்னவன் விருதும்,.திருக்குறள் முனிசாமி எழுதிய நூலும் ,முனைவர் வரதராஜன் எழுதிய நூலும் வழங்கினார்கள் . வருகைதந்த அனைவருக்கும் இனிப்பு ,காரம்" தாத்தாவின் கவிதைகள்" நூல் அன்பளிப்பாக வழங்கினார் நூலாசிரியர் அஞ்சூரியா க . செயராமன் அவர்கள் . துணைத் தலைவர் முனைவர் வரதராஜன் நன்றி கூறினார். கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள். படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன், இரமேஷ் கை வண்ணம்.

கருத்துகள்

கருத்துரையிடுக