வாசகியாகிய நான்:(16) கவிதா ஜவஹர் பட்டிமனறப் பேச்சாளர்
சாமுராய் ஒருவரிடம் போர்க்களத்தைப் பற்றி சிறுவர்கள் கேட்டார்கள். அதற்கு அந்த சாமுராய், 'போரைத் தெரிந்து கொள்ள ஓநாயின் கத்தியைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்' என்றார்.
'ஓநாய் கத்தி என்றால் என்ன?' என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு அந்த சாமுராய், 'பனிக்காலத்தில் ஓநாய்கள் குளிர் தாங்க முடியாமல் கிராமங்களை நோக்கி வரும். எங்கள் ஊரில் ஒரு கோழியை அறுத்து அதன் ரத்தத்தை மிகக் கூர்மையான கத்தியில் தடவி மாட்டி வைப்பார்கள். ரத்தம் உறைந்துவிடும். அவ்வழியாக வருகிற ஓநாய்கள் ரத்தத்தின் வாசனையை உணர்ந்து அந்த கத்தியை நக்க ஆரம்பிக்கும். கத்தியின் கூர்மையால் நாக்கு வெட்டுப்பட்டு அவற்றின் ரத்தம் ஒழுகும். ஆனால் அவற்றின் ரத்தம் கோழியின் ரத்தத்தோடு கலந்ததை உணராமல் மேலும் மேலும் நக்கி ரத்தம் வழிய இறந்து போகும்.
ஒரு போர் வீரன் கடமைக்காகக் கொல்கிறான்; கொலையை ருசியாக கருதினால் அது ஓநாய் கத்தியாக முடிந்து விடும்'.
-வெ.இறையன்பு
(வையத் தலைமைகொள்)

கருத்துகள்
கருத்துரையிடுக