வணக்கம் .
" நான் காஞ்சிபுரத்தில் பணிபுரிந்த போது நெடுஞ்சாலையின் நடுவில் குடிசை போட்டு ஆக்கிரமிப்பு செய்திருந்த ஒரு வீட்டை இடிக்க வேண்டி இருந்தது. அந்தப் பெண்மணியோ அடாவடிப் பேர்வழி. உஷாரான ஒரு தாசில்தாரை இந்தப் பணிக்கு ஆயுத்தப்படுத்தினேன். அவருக்குச் சில அறிவுரைகளையும் சொன்னேன். வீட்டை இடிக்க எந்திரம் சென்ற போது அவள் வெளியே வந்து தீக்குளிக்கப் போகிறேன் என்று உடம்பு முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டாள். அவள் பக்கத்திலேயே இருந்த தாசில்தார் அவள் தீக்குச்சியைப் பற்ற வைக்கும் போது குப்பென்று ஊதி அணைத்துவிட்டு, இரு பெண் பணியாளர்கள் மூலம் குண்டு கட்டாகத் தூக்கி அருகில் கொண்டு சென்றார். அந்தப் பெண்ணின் சேலை காய்வதற்குள் வீடு இடிக்கப்பட்டது. மாற்று இடம் தருவதற்கும் பட்டா வழங்கப்பட்டது. தற்கொலை மிரட்டல் என்பது ஒரு நிமிடப் பயமுறுத்தல். அதைச் சரியாகச் சமாளித்ததால் நீதிமன்றத் தீர்ப்பு உயிர்ச்சேதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 291.இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக