கரூரில் இறந்தோர்க்கு அஞ்சலி.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அமைப்புகளின் structure,திறமை பற்றி எனக்குத் தெரியவில்லை.ஆனால் அந்த மாவட்ட அமைப்பிற்கு எது ஆபத்து ,என்ன சிக்கல்கள் நடை பெறக் கூடும் எனச் சொல்லத் தெரிய வேண்டும்.இவருடைய second line of leadership யார்? புஸ்ஸி ஆனந்த் ,ஆதவ் அர்ஜூனா போன்றவர்கள் பாதுகாப்பு குறித்துத் திட்டமிட்டிருக்க வேண்டும்.
உயர் நீதி மன்றம் விஜய் கூட்டங்களின் பாதுகாப்பைப் பற்றிக் கேள்வி கேட்ட போதே காவல்துறை ரோட் ஷோவிற்கு அனுமதி மறுத்து பாதுகாப்பான மைதானக் கூட்டங்களை அனுமதித்திருக்க வேண்டும்.ஆனால் இப்போது விஜய் வாகனத்தை வழி நடத்தவே போலீஸ் தேவைப் பட்டிருக்கிறது.
காலை ஏழு மணியிலிருந்தே கூட்டம் சேர ஆரம்பித்திருக்கிறது.என் கோபம் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களைப் பார்த்து!ஒரு பொறுப்புள்ள பெற்றோர் வெயிலில் ,மிகப் பெரிய கூட்ட நெரிசல் இருக்கும் இடத்தில் குழந்தைகளை அழைத்து வரக் கூடாது.அப்படிச் செய்வோர்கள் நல்ல பெற்றோர்கள் அல்ல என்பதுதான் என் கருத்து.நேற்று விஜய்யைப் பார்க்காமல் போக மாட்டோம் எனக் குழந்தைகளை வைத்துக் கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்து அருவெறுப்பாக இருந்தது.உண்மையில் இந்த பத்து லட்ச இழப்பீடு செய்தி எனக்குக் கள்ளச் சாராயத்தில் இறந்தவர்களுக்குக் கொடுக்கும் இழப்பீடு போலத்தான் இருந்தது.என்னை மன்னியுங்கள்.I am so angry.
விஜய்யின் உரை அடுத்த பத்து நிமிடங்களில் ஊடகங்களில் வெளி வந்து விடும் சூழலில் இவர்களுக்கு உரை முக்கியமில்லை.விஜய்யைப் பார்க்கப் போகும் வெறிப் பிடித்த ரசிகக் கூட்டம் இது.
விஜய்க்கு மக்களைப் பற்றிய அக்கறை இருந்தால் சரியான நேரத்திற்குக் கிளம்பி இருப்பார்.அவர் புரிந்து கொள்ள வேண்டியது அரசியல் first day first show அல்ல என்பதை.
ஏற்கனவே திருச்சியில் ஒரு பள்ளி கூரை மேல் நின்று அது உடைந்து மக்கள் கீழே விழுந்த போதே ஏதோ பெரிய அசம்பாவிதம் நடக்கலாம் எனத் தோன்றியது.நேற்று அவர்கள் ஏறி நின்ற மரம் சிறியது.மெல்லிய கிளைகள் வேறு.அதிலிருந்து விழ ஆரம்பித்தவுடன்தான் சிக்கல் தொடங்கியது.கீழே படத்தைப் பார்க்கவும்.
தமிழ் நாடு இந்திரா காந்தி ,கலைஞர் கருணா நிதி,எம் ஜி ஆர்,ஜெஜெ எனப் பார்க்காத ரோட் ஷோவோ ,மைதானக் கூட்டமோ இல்லை.ஒரு நிமிடம் விஜய்காந்தை யோசியுங்கள் .ஏய் மரத்துல ஏறாதே,கரண்ட் கம்பியில் ஏறாதே என்றாவது குறைந்த பட்சம் சத்தம் போட்டிருப்பார்.
நேற்று கரூரில் உழைத்த மருத்துக் குழு,தன்னார்வலர்கள் அனைவர்க்கும் நன்றி .

கருத்துகள்
கருத்துரையிடுக