திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழா முன்னிட்டு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழா முன்னிட்டு 26.05.2025 அன்று காவிரி நுண்கலை கல்லூரியுடன் இணைந்து கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம், குரல் இசை, மிருதங்கம் வயலின் போன்ற துறை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது, அதன் தொடர்ச்சியாக துவாக்குடி மாநில உணவக மேலாண்மை மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரியில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி மற்றும் சுற்றுலா மற்றும் நிலைத்த மாற்றம் என்ற தலைப்பில் கட்டுரை பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் சுற்றுலா துறை சார்பாக வழங்கப்பட்டது 27.09.2025 அன்று திருச்சிராப்பள்ளி புனித சிலுவை கல்லூரி மற்றும் ஜமால் முகமது கல்லூரி மாணவர்களுடன் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பாரம்பரிய நடைப்பயணத்தை உதவி ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கத்தில் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில் சுற்றுலா வழிகாட்டிகளுடன் இணந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு செய்யப்பட்டது மற்றும் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு செய்யப்பட்டது, இநநிகழ்வில் சுற்றுலா தொழில் முனைவோர்கள், கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்

கருத்துகள்