28.9..2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம்- தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு ஏன் ? மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு ஏன் ? எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

28.9..2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம்- தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு ஏன் ? மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு ஏன் ? எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. துணைத்தலைவர் முனைவர் இரா. வரதராஜன் வரவேற்றார்.பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம், முன்னிலை வகித்தார் .ஆதி சிவத் தென்னவன் வாழ்த்துரை வழங்கினார். . செயலர் கவிஞர் இரா .இரவி தலைமையில் ,கவிஞர்கள் ,இரா . கல்யாணசுந்தரம் , முனைவர் இரா.வரதராஜன், கு கி .கங்காதரன் ,புலவர் மகா .முருகுபாரதி , கி .கோ .குறளடியான் ,கு .பால் பேரின்பநாதன், ச. லிங்கம்மாள், போ.சிவ சத்யா , இளையான்குடி இதயத்துல்லா, பா .பழனி,நா .குருசாமி ,மா .பரமானந்தம் , இரா .நீல மணி வண்ண கண்ணன் ,அவரது மனைவி கி .காயத்ரி ,சாந்தி திருநாவுக்கரசு ,சே .சாந்தி ஆகியோர் கவிதை பாடினார்கள். பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் புலவர் மகா .முருகுபாரதி , கி .காயத்ரி இருவருக்கும் தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கினர். துணைச் செயலர் கு கி .கங்காதரன் நன்றி கூறினார். மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் கலைமாமணி ஏ .எம் .ஜேம்ஸ் மறைவிற்கும் ,உலகத்தமிழாராய்ச்சி சங்கத்தின் தலைவர் இராம பாண்டியன் மறைவிற்கும் ,நடிகர் விஜய்நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் மறைந்த அனைவருக்கும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர் . கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் . படங்கள் புகைப்படக் கலைஞர்கள் சம்பத் ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

கருத்துகள்