படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

தமிழை வாழ்த்துவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்இலக்குவனார் திருவள்ளுவன் 28 August 2025 No Comment தமிழை வாழ்த்துவோம்! “Yellow Ribbons” என்னும் பாடல் மெட்டில் பின்வரும் பாடலைச் சொல்லித் தாருங்கள். கடமைகளை அறிவதுடன் கன்னித்தமிழ் மீதான பற்றினையும் பெறுவார்கள். காலை எழுந்ததும் பாடம் படிப்போம் மாலை முழுவதும் ஆடிக் களிப்போம் விளையாடிக் களிப்போம் பாரதி அன்று சொன்னதைக் கேட்டு நடப்போம்! பாடிஆடி மகிழ்ந்து நாம் கலையை வளர்ப்போம்-தமிழ்க் கலையை வளர்ப்போம்! கூடுவோம் ஒன்றாய்க் கூடுவோம்! பாரதி அன்று சொன்னபடிக் கூடி ஆடுவோம்! – ஒன்றாய்க் கூடி ஆடுவோம்! வாழ்த்துவோம்! சேர்ந்து வாழ்த்துவோம்! நாளும் தொழுது படித்து நாம் தமிழை வாழ்த்துவோம் – நம் தமிழை வாழ்த்துவோம்! இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள்