படங்கள் இனியநண்பர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
29 8 2025 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். மதுரை மாநகர் துவக்க விழா நடைபெற்றது.
மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சட்டக்கல்லூரி மாணவி தமிழினி மருது பாண்டியன் வரவேற்புரையாற்றி அனைவரையும் வரவேற்றார்.
பெரியார் நெறியாளர் திருமிகு பி . வரதராசன் அவர்கள் முன்னிலை வகித்து விழாவிற்கு நோக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் திரு கா. உதயசங்கர் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். கல்வித் துறையைச் சேர்ந்த திரு பத்மபாதன் மா. முருகன் அவர்கள் சிறப்புரையாற்ற வாழ்த்துரையை தமிழ்ச் செம்மல் கவிஞர் இரா ரவி அவர்கள் வழங்கினார்கள்.
குழந்தைகள் மாறுவேடம் அணிந்து கதை சொல்லியதும் பாடல்கள் பாடியதும் விழாவை கூடுதல் சிறப்பாக்கியது.
விழாவில் இறுதி நிகழ்ச்சியாக பள்ளி மாணவன் வி ஆ சான்றோன் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி மு சுலைகா பானு நஜிமுதீன் , உலக சாதனை நல்லாசிரியர் செய்திருந்தார்.
துவக்க விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக ச.நஜூமுதீன்
செயலாளராக மு. சுலைகா பானு
பொருளாளராக கவிஞர் துளிர்
ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






கருத்துகள்
கருத்துரையிடுக