இனிய வணக்கம் ." பதற்றம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு போன்றவற்றை மட்டும் அதிகப்படுத்தாமல் சில சுரப்பிகளின் உற்பத்தியையும் ஏற்படுத்துகிறது. உணவு பதற்றத்தோடு தொடர்புடையது. பதற்ற மனநிலையில் சாப்பிடுகிறவர்கள் அஜீரணத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகிறது.
பதற்றம் ஏற்படுகிற போது சரியாகவே சாப்பிடாமல் இருக்கிற சிலரையும் நெருக்கடி வந்தால் கைக்கு கிடைத்ததைக் கண்டுபடி கொரிக்கிற சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். பசியால் இறப்பவர்களை விட அதிகம் புசிப்பதால் இறப்பவர்கள் எண்ணிக்கையே அதிகம் .உணவைச் சரியான விகிதத்தில் அளவோடு உண்பவர்கள் மருந்து எதையும் உட்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் .முன் உண்ட உணவு செறித்த தன்மையை ஆராய்ந்து தக்க அளவு உண்டால் உடம்பிற்கு மருந்து தேவை இல்லை என்பது அவரது கருத்து.
' மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் (942)
இன்று பலர் கலோரி கணக்குப் பார்த்து எண்ணி அளந்து அளந்து சாப்பிட்டு ருசியையும் வாழ்க்கையையும் தவற விட்டு விடுகிறார்கள். இந்தக் கணக்கு பார்க்கும் பதற்றத்திலேயே எல்லாக் கோளாறுகளும் அவர்களுக்கு வந்து விடுகிறது .
நல்ல உணவு நம் பதற்றத்தைத் தணிக்கிறது. தமிழில் உண்பதற்குப் பல சொற்கள் இலக்கியத்தில் காணப்படுகின்றன. அருந்தல், உண்ணல், உறிஞ்சல், குடித்தல், தின்றல், துய்த்தல்,நக்கல்,பருகல்,துங்கல், மாத்தல்,மெல்லல், விழுங்கல் என்று உண்ணும் முறைகள் 12 வகையாக வகுக்கப்பட்டிருக்கின்றன. செறிவாக உண்பது, அதற்குப் பிறகு அதைச் செறிக்க உழைப்பது ஆகிய இரண்டும் நல்வாழ்விற்கான நற்சாவிகளாக இலக்கியத்தில் கையாளப்படுகின்றன.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப.264.இந்த நாள்
மகிழ்வான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக