படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கைகள் இரண்டு ஊருக்குதவ – இலக்குவனார் திருவள்ளுவன்இலக்குவனார் திருவள்ளுவன் 27 August 2025 No Comment கைகள் இரண்டு ஊருக்குதவ குழந்தைகளுக்குக் கண், காது முதலிய புலனுறுப்புகளைச் சொல்லித் தர உதவும் பாடல். “Ten little fingers” என்னும் பாடல் முறையில் அமைந்தது. பாடிப் பாருங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கைகள் இரண்டு ஊருக்குதவ கால்கள் இரண்டு நல்வழி நடக்க கண்கள் இரண்டு கனிவாய்க் காண செவிகள் இரண்டு கருத்தாய்க் கேட்க நிறைவாய்க் கேட்டுக் குறைவாய்ப் பேச வாயோ நமக்கு ஒன்றே ஒன்று! வாயோ நமக்கு ஒன்றே ஒன்று! குழந்தைகளுக்கு நாம் கடமைகளைச் சொல்லித் தரவேண்டாவா? – இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள்