மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. " கீழடி அறிக்கையை காலடியில் போடாதே "எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது
படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். கவிஞர் இரா .இரவி
மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 36-
27.7.2025
கீழடி அறிக்கையை காலடியில் போடாதே !
.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வரவேற்றார்.பொருளாளர் இரா..கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் வரதராசன் முன்னிலை வகித்தனர் . ஆலோசகர் வீர ஆதிசிவத் தென்னவன் வாழ்த்துரை வழங்கினார் .
தலைவர் கவிஞர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் தலைமையில் ,கவிஞர்கள் இரா .இரவி ,இரா .கல்யாணசுந்தரம் , முனைவர் இரா.வரதராசன், கு கி .கங்காதரன் , மகா முருகு பாரதி ,குறளடியான் ,பால் பேரின்பநாதன், ச. லிங்கம்மாள், சிவ சத்யா , தென்காசி புலவர் ம. ஆறுமுகம், இளையான்குடி இதயத்துல்லா, பா .பழனி , பா .பொன் பாண்டி,சு .பால கிருட்டிணன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.
பேராசிரியர் சி .சக்திவேல் எழுதிய ' மகாகவி பேசுகிறேன் " என்ற கவிதை நூலும்
கவிஞர் பா .பழனி எழுதிய ' எம் மொழியும் தமிழ் மொழியே ';என்ற கவிதை நூலும் வெளியிட்டனர். நூல் ஆசிரியர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நூலை அன்பளிப்பாக வழங்கினார்கள். .
பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர் பால் பேரின்பநாதன், கவிதாயினி சிவ சத்யா இருவருக்கும் தென்காசி திருவள்ளுவர் கழகம் வெளியிட்ட திருக்குறள் உரை நூலும் ,முனைவர் வரதராசன் எழுதிய நூலும் பரிசாக வழங்கினர். துனைச் செயலர் கு கி .கங்காதரன் நன்றி கூறினார்
கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .
--------------------------------------------------------------------------------------------
கீழடி அறிக்கையை காலடியில் போடாதே!
- கவிஞர் இரா. இரவி
*****
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய முதல் இனம் தமிழினம்
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே
இரும்போடு வாழ்ந்திட்ட இரும்பு மனிதன்
கீழடி என்பது தமிழர்களின் தொன்மை வரலாறு
கீழடி அறிக்கையை உலகம் அறிய வேண்டும்
வெளியிட்டு அரசிதழில் அச்சிட வேண்டும்
வீண்காலம் கடத்துவதை உடன் நிறுத்திட வேண்டும்
அமர்நாத் இராமகிருஷ்ணன் தொல்லியல் அலுவலர்
அளித்த அறிக்கை அப்படியே வெளியிட வேண்டும்
திருத்தச் சொல்லி கேட்பது கேடான செயல்
திருத்த முடியுமா? பிரேத பரிசோதனை அறிக்கையை!
இடமாற்றம் செய்து இன்னல் பல தந்தபோதும்
இன்முகத்துடன் உறுதியாக உள்ளார் அமர்நாத் அறிஞர்
மிரட்டலுக்கு பயந்து மாற்றி இருப்பர் வேறு சிலர்
மிடுக்கோடு மாற்றிட முடியாது என்கிறார் வீரர்
புராண புழுகான சரஸ்வதி நதியை
பாய்ந்து வந்து ஏற்பது என்பது மடமை
காந்தி தேசத்தில் உண்மையை மறைக்கலாமா?
கட்டாயம் கீழடி அறிக்கையை வெளியிட வேண்டும்
தமிழரின் வரலாறு தொன்மை ஏற்க மறுப்பதேன்
தமிழருக்கு எதிராகவே என்றும் செயல்படுவதேன்!
கீழடி அறிக்கையை காலடியில் போடாதே!
கீழடிக்காக தமிழர்களைப் போராடத் தூண்டாதே!
••••
style="clear: both;">




























































கருத்துகள்
கருத்துரையிடுக