" ஜெயகாந்தன் ஒரு சிறு கதை எழுதி இருப்பார். ஒப்பிடுவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர்த்தும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருக்கும் .ஒரு வீட்டில் இரண்டு பெண்கள். பெரிய பெண் பேரழகி. இரண்டாம் பெண்ணோ சராசரி. பெரியவளை நிறைய பேர் பெண் கேட்டு வந்த வண்ணம் இருப்பார்கள். அவளோ பிடிக்கவில்லை என்று நிராகரிப்பாள்.யார் கணவனாக வருவது என்று அவள்தான் தீர்மானிப்பாள்.அவள் திருமணம் ஆகிப்போனதும் இரண்டாம் பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும் .ஆனால் ஒருவர் கூட பெண் கேட்டு வரவில்லை. அந்தச் சூழலில் அடிக்கடி பெற்றோர்கள் தங்கள் மூத்த பெண்ணுக்கு நிறைய வரன்கள் வந்தது பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். இளைய மகளின் மனம் படுகிற பாட்டைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் வீட்டருகே உள்ள அலுவலகத்திற்கு ஒரு வாலிபன் பணிநிமித்தம் வருவான்.
மிகச் சிரமப்பட்டு அவனுக்கு விருந்தோம்பல் எல்லாம் செய்து அவனது நன் மதிப்பைப் பெற்று ஒருநாள் குடும்பத்துடன் அவன் பெண் கேட்டு வருமாறு செய்வார்கள். பெண்பார்க்கும் படலம் முடிந்தவுடன், இளைய மகள் எல்லோர் முன்பும் எழுந்து "எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை "என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மாடிப்படி ஏறுவாள். அவளுக்குத் தானும் ஒருவனை நிராகரித்த திருப்தி. அழகு என்பது உருவத்தைத் தாண்டிய வினைப்பாடு என்பது பலருக்குத் தெரிவதில்லை. ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பலருடைய மனத்தை அவர்கள் ஒடுக்கல் விழச்செய்து விடுகிறார்கள்.அழகைத் தாண்டிய உடலசைவு மொழியால் அடுத்தவர் இதயம் கவர்பவர்களும் உண்டு .அழகு உடலில் இல்லை; காண்பவர் விழிகளிலேயே இருக்கிறது.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 217&218" .இந்த நாள் உடலசைவு மொழியால் மகிழ்ச்சிபெறும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக