படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." சங் சூ என்கிற தாவோ ஞானி ஊடகங்களைப் பற்றியும், உள்வாங்குவதைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.' இரண்டு மனிதர்கள் அருகருகே இருந்தால் சொந்தத் தொடர்பு மூலம் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொலைவில் இருப்பவர்கள் மற்றவர்கள் மூலம் தகவல் அளித்துத்தான் கருத்தைப் பரிமாறிக் கொள்ள முடியும். உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் தகவல்கள் மூலம் தெரிவிப்பது தான் உலகத்திலேயே சிரமமானது. சில நேரங்களில் அவை மனிதர்களின் உணர்ச்சிகளை மிகைப்படுத்தக்கூடும். மகிழ்ச்சியாக இருக்கும் போது துதி பாடலாகவும், எரிச்சலுடன் இருக்கும்போது கோபமாகவும் உருமாறி விடும். எனவே மற்றவர்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ள உணர்ச்சிகளை மிதமாக வெளிப்படுத்துவது தான் நல்லது 'என்கிற அவருடைய கோட்பாடு மிகவும் பொருத்தம். முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 200" .இந்த நாள் மிதமான உவகையால் மகிழும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்