கீழடி உலகின் தாய்மடி!கவிஞர் இரா. இரவி

கீழடி உலகின் தாய்மடி!கவிஞர் இரா. இரவி ***** கீழடி உலகின் தாய்மடி என்பது உண்மை கீழடி உரைக்கின்றது தமிழரின் அன்றைய தொன்மை ! எழுத்தறிவோடு குடிமக்களும் வாழ்ந்திட்ட கீழடி எல்லா வகை நாகரிகத்தோடும் வாழ்ந்திட்ட கீழடி ! முத்து பவளம் அணிகலன்கள் கிடைத்திட்ட கீழடி முத்தாய்ப்பான தொழில்களும் புரிந்திட்ட கீழடி ! விண்முட்டும் புகழை பெற்றுத்தந்திட்ட கீழடி விளையாட்டு சாதனங்கள் பல தந்திட்ட கீழடி ! தந்தத்தால் ஆன சீப்புகள் கிடைத்திட்ட கீழடி தங்கத்தால் ஆன சங்கிலிகள் கிடைத்திட்ட கீழடி ! நெசவுக்கான பொருட்கள் கிடைத்திட்ட கீழடி நெசவு செய்து சிறப்பாக வாழ்ந்திட்ட கீழடி ! கண்கவரும் வண்ணப்பொருட்கள் தந்திட்ட கீழடி கழிவறைகள் கட்டி வாழ்ந்திட்ட கீழடி ! நீர் மேலாண்மை அறிவில் உயர்ந்திட்ட கீழடி நீர் எடுக்க கிணற்றுத்தொட்டிகள் செய்திட்ட கீழடி ! தோண்டத் தோண்ட தந்து கொண்டே இருக்கும் கீழடி தோண்டுவதற்கே போராடிப் பெற்ற கீழடி ! சுட்ட சட்டிகள் செய்து வாழ்ந்திட்ட கீழடி சுடும் தொழில்நுட்பம் அறிந்து வாழ்ந்திட்ட கீழடி ! வெள்ளை வண்ணத்தால் அழகுபடுத்திட்ட கீழடி வாழ்வாங்கு வாழ்ந்திட்ட வளம் மிக்க கீழடி ! உலகமே அன்னார்ந்து வியந்திட்ட கீழடி உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி வாழ்ந்திட்ட கீழடி!

கருத்துகள்