இனிய காலை வணக்கம் ." நாம் சரியாகக் கவனிக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன .நாம் கேட்பதைவிட, சொல்வதற்குச் சிறந்த செய்தி இருப்பதாக நினைப்பது. கவனிக்க வேண்டிய காரணம் இல்லை என்று நினைப்பது. அவர்கள் சொல்வது ஏற்கனவே நமக்குத் தெரியும் என்று நினைப்பது. இவை கவனத்தைத் தடுக்கும் குறுக்கீடுகள். சொல்பவரை நமக்குப் பிடிக்காததால் ,நம் மனம் மூடி இருப்பதால், பேசுபவரின் தகவலை வடிகட்டிக் கேட்க வேண்டியதை மட்டுமே நாம் கேட்பதால், முடிவுகளுக்குத் தாவுவதால் ,நம் உரை வரும்போது என்ன பேசுவது என்று யோசிப்பதால், பேசுவதை நம் மனதிற்குள்ளே விமர்சிப்பதால்.
நமது மற்றப் பொறிகளுக்கு எல்லைகள் உண்டு. கண்களை மூட இமைகளும், வாயை மூட இதழ்பளும் உண்டு. ஆனால் காதை மூட மூடி எதுவும் இல்லை .உற்றுக் கேட்பவர்களே உலக சாதனையாகப் போற்றப்படும் புதிய கண்டுபிடிப்புகளை அளித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றை வாசித்தால் தெரிந்து கொள்ள முடிகிறது.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 205" .இந்த நாள் உற்றுக் கேட்டு் இனிமை பெறும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக