படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி *உதடு* *ஒட்டாத* *குறள்கள்* *மொத்தம்* *எத்தனை* ❓ சரியான விடை *24* உதடு ஒட்டாத குறட்பாக்கள். குறிப்பாக *யாதனின் யாதனின் நீங்கியான்* என்று குறளைக் கூறுவார்கள்.. ஆனால் உதடு ஒட்டாத திருக்குறள் மொத்தம் *24* உள்ளன. *208, 240, 286, 310, 341, 419, 427,* *472, 489, 516, 523, 678, 679, 894,* *1080, 1082, 1177, 1179, 1211, 1213,* *1214, 1236, 1286, 1296.* *குறள்: 208.* தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று. *குறள்: 240.* வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். *குறள் : 286.* அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர். *குறள் 310:* இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. *குறள் 341:* யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். *குறள் எண் : 419.* நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது. *குறள் 427:* அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். *குறள் 472:* ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். *குறள் 489:* எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். *குறள் 516:* செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். *குறள்: 523.* அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. *குறள் : 678* வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. *குறள்: 679.* நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். *குறள் 894:* கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். *குறள்: 1080.* எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. *குறள் 1082:* நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. *குறள்: 1177.* உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். *குறள் 1179:* வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். *குறள்: 1211.* காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. *குறள் 1213:* நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். *குறள் 1214:* கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. *குறள்: 1236.* தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. *குறள் 1286:* காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. *குறள்: 1296.* தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு. 🙏🏻

கருத்துகள்