இனிய காலை வணக்கம் ." மேலண்மையில் ஒருவரைப் பற்றி எந்த விதமான விருப்பும் வெறுப்பும் இன்றி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படும் செய்தி. அப்போதுதான் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் .ஆனால் இன்று பல நிறுவனங்களில் ஓரவஞ்சனையும் பாகுபாடும் இருக்கின்றன.' ஆளைக் காட்டு விதியைக் காட்டுகிறேன் 'என்கிற மனப்பான்மை நிலவி வருகிறது. அந்த எண்ணத்தில்
வேரூன்றியி ருப்பவர்களால் ஒருபோதும் சரியான முடிவுகளை எடுக்க முடியாது .ஏனென்றால் முடிவுகள் எடுப்பது சார்பற்ற தன்மையில் தான் சிறப்பாக வெளிப்படும். முதலிலேயே ஒருவரைப் பற்றிய கருத்தாக்கத்தை வைத்திருப்பவன் சமன் செய்து சீர் தூக்கும் கோலாகச் செயல்பட முடியாது."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 202" .இந்த நாள் சரியான முடிவுகளால் உவகை கொள்ளும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக