படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! கவிஞர் செ.திராவிடமணி (2020 June 25 ல் முகநூல் பதிவு.🙏

மீள் ஒரு பிச்சைக்காரன் சாகிற தருவாயில் இருந்தான். இன்னும் சில நிமிடங்களில் அவனுக்கு மரணம் நேரப்போகிறது என்கிற நிலையில், அவனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவமனையின் சம்பிரதாய வழக்கப்படி, பிரார்த்தனை வார்த்தைகளைச் சொல்லித்தருகிறார்கள். அவ்வாறு சொன்னால், ஆன்மா எளிதாகப் பிரியும் என்பது நம்பிக்கை. போதகர் அவனருகே சென்று, இரு கைகளையும் கூப்பி பிரார்த்திக்கச் சொல்கிறார். அவன் தன் வலக்கையை மட்டும் மூடியே இருந்தான். வலக்கையை திறக்கவே மறுக்கிறான். போதகர், இந்த ஒரு நொடி மட்டும் நீ வலது கையைத்திறந்து பிரார்த்திக்க கூடாதா என்கிறார். அவன் ஒத்துழைக்கவே இல்லை. அவனுக்கு அவ்வேளையில் மரணம் நிகழ்கிறது. அவனது வலது கையைத் திறந்தால், சில சில்லறைக்காசுகள் இருக்கிறது. தனக்கு மரணம் நிச்சயம் என்று தெரிந்தும், அந்தக்காசுகளை விட அவனுக்கு மனம் இல்லை. அந்தப்பிச்சைக்காரனைப்போலவே, நாமும் சில அற்ப சுகங்களுக்காக, நிரந்தரம் என்று சிலவற்றைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.. ....- டாக்டர்.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் “உள்ளொளிப்பயணம்“ என்ற நுாலிலிருந்து.. கவிஞர் செ.திராவிடமணி (2020 June 25 ல் முகநூல் பதிவு.🙏

கருத்துகள்