நூலின் பெயர் : திரும்பிப் பார்க்கிறேன் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி 98421 93103. நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன்.ஆசிரியர் பொதிகை மின்னல்

நூலின் பெயர் : திரும்பிப் பார்க்கிறேன் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி 98421 93103. நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன்.ஆசிரியர் பொதிகை மின்னல் ,மின்னல் கலைக்கூடம் 117. எல்டாம்ஸ் சாலை ,தேனாம்பேட்டை .சென்னை . வெளியீடு :வானதி பதிப்பகம் பக்கங்கள் 78. விலை ரூபாய் 70.. 23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17 தொலைபேசி044 24342810 / 24310769 கவிஞர் இரா. இரவி ஆளுமைமிக்க எழுத்தாளர். தேனீ போன்று சுறுசுறுப்பாக இயங்கி தமிழ்த்தேன் தருபவர். ஆண்டுதோறும் 5 நூல்களையாவது வெளியிட்டு விடுவார். இப்பொழுது அவர் நம்கையில் தந்திருப்பது ‘திரும்பிப் பார்க்கிறேன்’ எனும் கட்டுரை நூல். இது அவரது 33 ஆவது நூலாகும். சுற்றுலாத்துறையில் பணியாற்றியபோது நிகழ்ந்த சுவையான அனுபவங்களை நூலாக்கி, தமிழ்மக்கள் பயனுற தந்திருக்கின்றார். 46 கட்டுரைகளை தெளிவாகவும், சுருக்கமாகவும், சுவையாகவும் தந்திருக்கின்றார் எழுத்துவள்ளல் இரா. இரவி. ஒவ்வொரு கட்டுரையிலும் ஓர் அறிஞர் பெருமகனாரோடு பழகிய அனுபவங்களைத் தந்து மெய்சிலிர்க்க வைக்கிறார். அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்கும்போது, வெற்றி பெற வாழ்த்தி கவிதை எழுதியதையும், அவரிடமிருந்து நன்றி வாழ்த்துடன், திருச்சி வந்த சமயம் சந்திக்க வாய்ப்பளித்தது, இறையன்பு அவர்களின் நூல்களை கலாம் அவர்களுக்கு விமானத்தில் கட்டணம் பெறாமல் அவர்கள் எடுத்துச் சென்றதும் ஆர்வமூட்டுகின்றன. எழுத்துவேந்தர் இந்திரா சௌந்திரராஜன் மறைந்தபோது அவருடன் பழகிய நாள்களை நினைவு கூர்ந்து தந்திருக்கும் கட்டுரை மறக்க முடியாது. பேரா.கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் ‘தசாவதாரம்’ படம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அவர் அப்பவே போன் போட்டு கமல்ஹாசனோடு பேச வைத்ததை சொல்ல அப்பப்பா நிறைய சிறப்பாளர்களுடன் புத்தகம் நிறைய குவிந்து கிடக்கிறது. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்

கருத்துகள்