மணம் கமழும் தமிழே!மனம் கவரும் தாயே!
கவிஞர் இரா. இரவி
*****
உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ்
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்
தேவநேயப் பாவாணர் அன்றே உரைத்தார்
தேவமொழிக்கு எல்லாம் மூத்தமொழி தமிழ்
தரணியில் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்
தரணி எங்கும் இன்றும் ஒலிக்கும் மொழி தமிழ்
எழுத்தறிவோடு வாழ்ந்தவன் தமிழன் கீழடி காட்டியது
எழுத்தை கல்வெட்டிலும் ஒலைச்சுவடியிலும் பதித்தவன்
அமெரிக்காவின் மொழி ஆய்வாளர்கள் அறிவித்தனர்
அகிலத்தின் முதல்மொழி செம்மொழி தமிழ்மொழி
என்னவளம் இல்லை நம் ஒப்பற்ற தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்தவேண்டும் பிற மொழியில்
தமிழை தமிழாகப் பேசவும் எழுதவும் வேண்டும்
தமிழில் கலப்படம் செய்வது தமிழுக்குக் கேடு
நாசா விண்வெளிக்கு அனுப்பிய மொழியில் தமிழ்
நானிலம் போற்றிடும் ஒப்பற்ற மொழி நம் தமிழ்
அறிவியிலில் சாதித்த அனைவரும் தமிழ் பயின்றவர்கள்
அறிவியலில் சிந்திக்க உதவிய மொழி தமிழ்மொழி
தமிழன் இல்லாத நாடே இல்லை தரணியில்
தமிழ் ஒலிக்காத நாடே இல்லை தரணியில்
மணம் கமழும் தமிழே! மனம் கவரும் தாயே!
முத்தமிழின் முத்திரையே ! கிழிப்போம் போலி முகத்திரையை!
கருத்துகள்
கருத்துரையிடுக