தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் இன்று (மே 7) 211 ஆவது பிறந்தநாளில் பாராட்டிப் போற்றி வணங்கி மகிழ்வோம். அறிஞர் கால்டுவெல் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 18 மொழிகளைக்‌ கசடறக் கற்றுத் தேர்ந்து, 15 ஆண்டுகாலம் இந்திய மொழிகளை ஆய்வு செய்து 168 ஆண்டுகளுக்குமுன் (1856ல்) " திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் " என்ற ஆய்வு நூலினை ஆங்கிலத்தில் எழுதி, தமிழ் தனித் தன்மை வாய்ந்த, தனித்து இயங்கக்கூடிய ஆற்றல் பெற்ற " உயர்தனிச் செம்மொழி " என்று உரிய சான்றுகளுடன் நிலைநாட்டியவர். மதபோதகராக அயர்லாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, தமிழ் மண்ணில் 53 ஆண்டுகள், தன் இறுதி மூச்சுவரை தமிழுக்கும் பெருந் தொண்டாற்றி தமிழனாகவே வாழ்ந்த " தமிழறிஞர்" இராபர்ட் கால்டுவெல் அவர்களை - பிறந்தநாளில் போற்றி வணங்குவோம். நின் புகழ் நீடு வாழ்க !

கருத்துகள்