படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி ! ‘பூங்காத்து திரும்புமா?’ – நினைவைவிட்டு நீங்கா முதல் மரியாதை! சாகும் வரை ராதாவுக்காக சிவாஜி ஏன் மரண தருவாயிலும் காத்திருக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ். பாரதிராஜாவின் வழக்கமாக கிராமத்து பாணியிலான கதை. இந்தப்படம் ஆங்கிலப்படம் மற்றும் ஜெயகாந்தனின் சமூகம் என்பது நாலு பேர் என்ற நாவல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானது. மரணப்படுக்கையில் இருக்கும் கிராம பெரியவரின் பிளாஷ் பேக்தான் முதல் மரியாதை. கிராம பெரியவர் சிவாஜி கணேசன், அவரது மனைவி வடிவுக்கரசி. இருவருக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையே இருந்திருக்காது. கட்டாயத்துக்காக வடிவுக்கரசியை திருமணம் செய்துகொண்டிருப்பார். அவர்களுக்கு ஒரு மகள் இருப்பார். அந்த பெண் திருமணம் முடித்து வேறு ஊரில் வசித்துக்கொண்டிருப்பார். அந்த ஊருக்கு பரிசல் ஓட்டும் பெண்ணாக வருபவர்தான் ராதா, சிவாஜி கணேசனுக்கும், ராதாவுக்கும் இடையே நிறைய வயது வித்யாசம் இருக்கும். ஊரில் சுட்டித்தனம் செய்துகொண்டு படகு ஓட்டி பிழைத்துக்கொண்டிருக்கும் ராதா மீது சிவாஜிக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படும். அது காதலாக உருவெடுக்கும். அந்த விஷயம் ஊரில் அரசல் புரசலாக பரவி, ஏற்கனவே கணவரை திட்டித்தீர்க்கும் மனைவி வடிவுக்கரசியை மேலும் அவரை திட்ட வைக்கும். நீதி, நேர்மைக்கும் கட்டுப்பட்டு நடக்கும் கிராம தலைவராக இருக்கும் சிவாஜியின் மருமகன் ஊருக்கு வந்து தங்கும்போது, அந்த ஊரில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார். அந்த பெண்ணின் தந்தை ஊர் தலைவர் என்ற பெயரில் சிவாஜியிடம் முறையிட, சிவாஜி நீதிக்கு கட்டுப்பட்டு தன் மருமகனையே போலீசிடம் பிடித்துக்கொடுப்பார். இதற்கும் சேர்த்து மனைவி வடிவுக்கரசியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பார். சிறு வயது பெண்ணை காதலிக்கும் சிவாஜி நடிப்பில் கலக்கியிருப்பார். ராதாவும் துடுக்குத்தனம் மற்றும் கனமான நடிப்பு என மாறிமாறி கலக்கியிருப்பார். அப்போதுதான் அவரது பரிசலில் சவாரி வரும் சத்யராஜை அடித்து கொலை செய்துவிட்டு சிறை சென்றுவிடுவார். ராதா எதற்காக சத்யராஜை கொலை செய்தார்? உண்மையில் சத்யராஜ் யார்? அவரை ராதா எதற்காக கொலை செய்ய வேண்டும். சாகும் வரை ராதாவுக்காக சிவாஜி ஏன் மரண தருவாயிலும் காத்திருக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ். பாரதிராஜாவின் வழக்கமாக கிராமத்து பாணியிலான கதை. இந்தப்படம் ஆங்கிலப்படம் மற்றும் ஜெயகாந்தனின் சமூகம் என்பது நாலு பேர் என்ற நாவல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானது இந்தக்கதை. இந்தப்படத்துக்கு முதலில் ராஜேஷ், எஸ்பிபி என யோசித்து பின்னர் சிவாஜி கணேசன் நடித்தார். ராதா கதாபாத்திரத்தில் ராதிகா நடிப்பதாக இருந்தது. பின்னர் ராதா படத்திற்குள் வந்தார். இளையராஜாவின் இசையில் பூங்காத்து திரும்புமா?, வெட்டிவேரு வாசம், அந்த நிலவத்தான் நான், ராசாவே உன்ன நம்பி, நீதானா அந்தக்குயில் என அனைத்து பாடல்களும் படு ஹிட். இந்தப்படம் திருமணம் கடந்த உறவு மற்றும் வயதில் மூத்தவருடன் காதல் என்று இருந்தாலும், மக்கள் மத்தியில் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது. பத்திரிக்கைகளும் நல்ல விமர்சனத்தை கொடுத்தன. இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த படமாக உள்ளது.

கருத்துகள்