முனைவர் ஆ .மணிவண்ணன் ,M.A.,M.L.,PH.D., காவல் உதவி ஆணையர் ,

முனைவர் ஆ .மணிவண்ணன் ,M.A.,M.L.,PH.D., காவல் உதவி ஆணையர் , . அலைபேசி 91 94432 08519. "ஆதி இல்லம் " மனை என் 1 மற்றும் 2 லயன் சிட்டி , திருநகர் ,மதுரை..625006. மின் அஞ்சல் a.m.lastcitizen@gmail.com ஆயிரம் ஹைக்கூ நூல் படித்து விட்டு வடித்த கவிதை . ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா .ரவி . ஆசை ஆசை அவ்வளவு ஆசை அருந்தமிழை வளர்க்க ... பொருளாதாரம் கைவிட்டது தமிழுக்கு ரவி என்ற புலவனைச் சேர்க்க .. படித்தது கொஞ்சம் , கேட்டது அளவாய் , ஆக்கியது ஏராளம் . காட்டிக் கொள்வது கொஞ்சம் வெளியிட்டால் எரிமலை மனதுக்குள் ஆசை . காதலித்தது பெண்ணுருவமல்ல பெண்ணுரிமை . செலுத்துவது மண்ணுக்கும் மொழிக்கும் முதல் மரியாதை . கொஞ்சம் சொற்கள் ஆழமான கருத்துக்கள் நிறைந்த வளம் . சம்பளத்திற்கு அரசு ஊழியர் சமூகத்திற்கு மருத்துவர் தமிழுக்கு பல்கலைவேந்தர் . அமைதி நடவடிக்கை எண்ணம் எழுத்து போர்குணம் . அள்ள அள்ள குறையாத அருந்தமிழ் அட்சயப்பாத்திரம் . தலைசெருக்கில்லாத தமிழன் தழும்பாத நிறைகுடம் . பிறமொழி கலப்பில்லா இக்கவிஞன் பாவேந்தர் வாரிசு . தமிழ் காதலர் பகுத்தறிவு விரும்பி தமிழின களப் போராளி . கண்டிப்பாய் ஓர்நாள் தமிழ் அரியணை ஏற்றும் சோதிடமல்ல " உண்மை " . என்றும் இவர் புகழ் தமிழுலகம் பேசும் !பேசும் ! ஆசையுடன் ...ஆ .மணிவண்ணன் .

கருத்துகள்