நூலின் பெயர் : தமிழ் எங்கள் உயிருக்குமேல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,

நூல் மதிப்புரை நூலின் பெயர் : தமிழ் எங்கள் உயிருக்குமேல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! ூல் மதிப்புரை : திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed., நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 11. தொலைபேசி : 044-24342810 பக்கம் : 84 விலை : 70 ந ஐயா அவர்களின் 30-ஆவது நூல் இது. நூல் முழுவதும் தமிழின் பெருமையும் சிறப்பும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நூலின் அணிந்துரை கவிதை உறவு மாத இதழ் ஆசிரியர் “கலைமாமணி” ஏர்வாடி. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இனி நூலிற்குள் செல்வோம். ஒழுக்கம் பற்றி நூல் “ஒழுக்கத்தை உயிருக்கு மேலாகச் சொல்லிய தமிழ்! ஒப்பற்ற வீரத்தை உலகிற்கு ஓதிய தமிழ்!” நூலின் தமிழின் உயர்வாக “பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ்மொழி பார் போற்றிப் பாராட்டும் மொழி தமிழ்மொழி என பாராட்டப்படுகிறது?” இணையத்தில் வாழும் தமிழ் பற்றி நூல் “ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் இனிய ஆதிக்கம் செலுத்தும் மொழி நம் தமிழ் மொழி!” தமிழின் பெருமைகளாக நூல் “மொஞ்சதாரோ அரப்பா நாகரிகத்திற்கும் முந்தைய நாகரிகம் தமிழன் நாகரிகம்!” கீழடியின் சிறப்புகளாக நூல் “உலக நாகரிகம் அனைத்தும் இன்று உன்னத கீழ்டிக்கு கீழ் என்றானது? “அமெரிக்காவின் ஆய்வுக்கூடம் இன்று ஆராய்ந்து கூறி உள்ளது மூவாயிரத்துக்கு முந்தியது ?” தமிழின் பெருமையும் சிறப்பையும் அறிந்துகொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்ற இனிய நூலில் தமிழின் பெருமையும் சிறப்பும் செம்மையாக ஆசிரியரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்