நகைச்சுவை மன்றம்.மதுரை ஏப்ரல் மாத விழா.படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் கார்த்திகேயன் ககை வண்ணம்.2.4.2023

கருத்துகள்

  1. நகைச்சுவை மன்றம் பற்றிய எனது கவிதை

    மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என பெயர் சூட்டி சிலர் மல்டி நோய்களோடு அதிகரித்து வருவோரை சிலர் எதிர்நோக்கி காத்திருக்க மாற்றாக சிந்தித்து பொது நலத்தோடு மலர்ந்தது தான் மதுரை மீனாட்சி மருத்துவமனையோடிணைந்த "நகைச்சுவை மன்றம்" ஏழை எளியோருக்கு கட்டணச் சலுகையும் அதுவும் இயலாதோருக்கு இலவசமாய் புற்றுநோய் சிகிச்சை செய்தும் உயிர் பிழைக்க வைத்துதவும் உன்னத மருத்துவச் சேவை ஆற்றி வரும் நல்லோராம் நாடு போற்றும் டாக்டர் சேதுராமன் டாக்டர் குரு சங்கர் இவர்களோடு இணைந்து பணியாற்றி வரும் ஏனைய மருத்துவர்கள் செவிலியர்கள் உதவியாளர்கள் ஓட்டுநர்கள் காவலர்கள் எல்லோரும் நலமோடும் நற் பெயரோடும் புகழோடும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க என நகைச்சுவை மன்றத்தார் சார்பில் வாழ்த்துகிறேன் வாய்ப்பளித்த நல் உள்ளங்களுக்கு நன்றி சொல்லி மகிழ்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. மதுரை அரசாலும் மீனாட்சி பட்டணத்தில் மருத்துவத்தை ஆண்டு வரும் மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் மதுரைக்கும் பெருமை சேர்த்து தமிழ் மக்களுக்கும் மருத்துவ சேவை செய்து பினி அகற்றும் நற்பணியில் முன்னணி யெனவே திகழும் மீனாட்சி மருத்துவமனை இதனை தோற்றுவித்த தூயவராம் டாக்டர் சேதுராமன் அவர்கள் மனதினிலே தோன்றிய மந்திரச் சொல் தான் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என தொலைநோக்கோடு தொடங்கப்பட்டது தான் இந்த நகைச்சுவை மன்றம் என்பார். நல்லாரவரோடு நல்லிணக்கம் கொண்ட நகைச்சுவைச் சிகரமாம் முனைவர் திரு கு.ஞானசம்பந்தம் அவர்கள் தலைவராய் பொதுச் செயலாளராய் இருந்து வெற்றி நடை போட்டு வெள்ளி விழா கண்ட "நகைச்சுவை மன்றம்" இதில் பங்கு கொண்ட பலர் சின்னத் திரையிலும் அகண்ட வண்ணத்திரையிலும் மின்னி மிளிர்கின்றார் அதை நன்றியோ டென்னி அவர் மகிழ்கின்றார்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக