இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்! முதுநிலை தமிழாசிரியர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி !மதுரை .

இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்! முதுநிலை தமிழாசிரியர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி !மதுரை . வானதி பதிப்பகம். 23.தீனதயாளு தெரு.தியாகராயர் நகர். சென்னை.600017.பக்கங்கள் 74.விலை ரூபாய் 70.தொலைபேசி 044 24342819 / 24310769 தகவல் களஞ்சியம்' இளங்குமரனார் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் அறிய நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான நூல் நண்பர் கவிஞர். இரா. இரவி அவர்கள் எழுதியுள்ள 'இளங்குமரனார் களஞ்சியம்'.வானதி பதிப்பகம் இந்நூலை சிறப்பாக வடிவமைத்து அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கிய உலகிலும் இணையத்திலும் பரபரப்பாக இயங்கும் இளைஞர் இரா. இரவி. இவரது ஒவ்வொரு நூலும் தனி முத்திரை பெற்று விளங்கக் கூடியது. அவற்றுள் இளங்குமரனார் களஞ்சியம் நூல் நமக்கு வரமாக கிடைத்திருக்கிறது. "விருதுகள் பரிசுகள் பாராட்டுகள் பெற்ற போதும் விருதை தலையில் என்றும் ஏற்றிக் கொள்ளாதவர். ஆடம்பரத்தை விரும்பாது அடக்கமாக வாழ்ந்தவர் ஆரவாரமின்றி அமைதியாக தமிழ்ப்பணி ஆற்றியவர்" என்று தமக்கே உரிய கவிநடையில் இளங்குமாறனாரின் படைப்புகளை பண்புகளை அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார். இந்நூலை வாசித்து முடித்ததும் மூதறிஞர் இரா இளங்குமனார் அவர்களோடு இலக்கிய உலகில் பயணித்த அனுபவம் கிட்டுகின்றது. இளங்குமரனாரின் தகவல் களஞ்சியமாக இந்நூலை கவிஞர் இரவி படைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.  இலக்கிய உலகில் பயணிக்க இளங்குமரனார் களஞ்சியத்தை வாசியுங்கள்... 

கருத்துகள்