படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

*உலக குடிமகன் பீலே* காலையில் கால்பந்து மன்னனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நாம் இனிய இரவில் *உலக குடிமகன் பீலே* என்று கூற உன்னத காரணம் உண்டு. உலக நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபை எனக்கு தெரிந்து இருவருக்கு மட்டும் *உலக குடிமகன்* விருது வழங்கியுள்ளது. ஒருவர் காலம் சென்ற குத்துச்சண்டை வீரர் காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே என்ற முகமது அலி மற்றவர் இன்று மறைந்த உலக கால்பந்து ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் முதலிடம் பெற்ற கருப்பு முத்து *எடிசன் டி நாசிமெண்டே என்ற இயற்பெயர் கொண்ட பீலே அவர்கள்*. எது என்ன உலகக் குடிமகன்னு கேட்டீங்கன்னா நாமெல்லாம் இந்திய குடிமகன். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போம். நாம் அமெரிக்கா லண்டன் பாரீஸ் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டின் விசா வேண்டும். பாஸ்போர்ட் விசா இல்லாமல் நாம் எந்த நாட்டிற்கும் போக முடியாது ஐக்கிய நாடுகள் சபை பீலேவிற்கும் முகமது அளிக்கும் அவர்களின் ஒப்பற்ற திறன் கருதி உலக குடிமகன் என்ற விருதை வழங்கியுள்ளது ஆகவே அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் எந்த நாட்டிற்கும் பாஸ்போர்ட், விசா இல்லாமல் பயணம் செய்யலாம் இது எத்துணை சிறப்பு வாய்ந்த செயல். 1940 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ஒரு சிறிய கடற்கரை கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த பீலே தனது பதினேழாவது வயதில் உலகப் கோப்பை கால்பந்து அணியில் விளையாடி பிரேசில் நாட்டிற்கு வெற்றி கோப்பையை பெற்றுத்தந்தார். 1958 1962 1966 1970 என நான்கு முறை பிரேசில் அணிக்காக உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே 1958 1962 1970 மூன்று ஆண்டுகள் பிரேசில் நாட்டிற்கு வெற்றி மாலை சூடிக் கொடுத்தவர். ஒரு கிரிக்கெட் வீரர் நாள் முழுவதும் மைதானத்தில் இருந்தால் அவர்கள் அந்த அளவு களைப்படைய மாட்டார்கள். ஆனால் ஒரு கால்பந்து வீரர் அவர்கள் விளையாடும் தொண்ணூறு நிமிடமும் மிக வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட விளையாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக போட்டிகளில் நான்கு முறை ஒருவர் விளையாடி அந்த நான்கில் மூன்று முறை வெற்றிக் கோப்பையை வென்றார் என்றால் எப்படிப் பட்ட மாட்சிமை. நான் அடிக்கடி குறிப்பிடுவேன் கால்பந்து என்றால் முதலிடம் பீலே அடுத்த இடம்தான் அர்ஜென்டினாவின் மரடோனா கிரிக்கெட் என்றால் முதலிடம் டான்பிராட்மென் அடுத்த இடம்தான் டெண்டுல்கர் லாயிட் லாரா கபில்தேவ் போன்றோர் குத்துச்சண்டை போட்டியில் முகமது அலி, டென்னிஸ் போட்டியில் போரிஸ் பெக்கரும் இவான் டெண்டிலும் சிறிதே வித்தியாசத்தில் முதலிடம் இருப்பார்கள். இதற்கான தரவுகளை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன் எழுபதுகளில் அமெரிக்கா சென்ற பீலே அங்கு கால்பந்து விளையாட்டை பெரிய அளவில் வளரச் செய்தார் அந்த நாட்டின் நியூயார்க் காஸ் மோஸ் கிளப் அணிக்காக விளையாடியவர் அந்த அணியுடன் 1977 ஆம் ஆண்டு காட்சி விளையாட்டுக்காக *கல்கத்தா வந்த பீலே கல்கத்தாவின் மோகன் பெகான் அணியுடன் விளையாடி இந்திய கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்தார்*. அப்போது இரு அணிகளும் 2:2 கோல் அடித்து சமண்செய்தது. என்னைப் போல உங்களைப் போல *நம்முடைய மறைந்த நடிகர் முத்துராமன் (நடிகர் கார்த்திக்கின் தந்தை) பீலேயின் தீவிர ரசிகர்* 1977 ஆம் ஆண்டு பீலே கல்கத்தா வந்த போது பீலேவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டாடி மகிழ்ந்தவர். *கால்பந்து விளையாட்டு இருக்கும் வரை கருப்பு முத்து பீலே புகழ் இருக்கும்* துரை கணேசன் இதனுடன் இன்றைய இனிய இரவுகள் பாடல்களை வழங்கும் துரை கணேசன்-கண்ணையா 30-12-2022

கருத்துகள்