அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !நூல் விமர்சனம் : திருமதி செந்தாமரை சியாமளாதேவி (கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன்அவர்களின் மனைவி )

‘அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !நூல் விமர்சனம் : திருமதி செந்தாமரை சியாமளாதேவி (கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன்அவர்களின் மனைவி ) வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017. பக்கங்கள் : 108, விலை : ரூ.90கவிஞர் இரா.இரவியின் ‘அம்மா அப்பா’ புதுக்கவிதை வரிகள் அத்தனையும் இனிமை.தான் உயராவிட்டாலும்தன் குழந்தையை         தரணியில் உயர வைத்து அழகு பார்ப்பவர்தாய்.மனைவி வந்ததும் தாயைமதிப்பதில்லை         தாயோ மகனை நினைத்து வாடுகிறாள்இது உண்மை.        தாய்மொழியை சேய்க்கு கருவிலேயே தன் வயிற்றுக்குள்ளேயேபயிற்றுவித்தவள் அம்மா.        நேசம் / பாசம் / வேசம் அறியாதவள் அம்மா        குழந்தைமறந்தாலும் மறக்காதவள் அன்னை         குழந்தையை என்றுமே வெறுக்காதவள் அன்னைஅன்னைக்கு இணையானஉறவு உலகில் இல்லை,அன்னையை பற்றி கவிதைபடிக்கும்போது, அன்னை இவ்வளவு துயரத்தையும் தாங்கி வளர்க்கிறாள். அத்தனை வரிகளும் அருமைஅருமை. வாழ்த்துக்கள் தம்பி.

கருத்துகள்