ுழந்தைப் பாடல் கவிஞர் அழ .வள்ளியப்பா வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

குழந்தைப் பாடல் கவிஞர் அழ .வள்ளியப்பா வாழ்க ! கவிஞர் இரா .இரவி ! அழ .வள்ளியப்பா என்ற அவரது பெயரினை ! அழகிய பாடல்கள் வடித்த வள்ளியப்பா எனலாம் ! கவிதையோடு நின்றுவிடாமல் கதைகளும் வடித்தார் ! கற்கண்டு சொற்க்கொண்டு கவிவிருந்து வைத்தார் ! புதுக்கோட்டை மாவட்டம் இராயவரத்தில் பிறந்த தமிழ்வரம் ! புதுப்புதுப் பாடல்கள் குழந்தைகளுக்குத் தந்த தமிழ் இமயம் ! நாட்டு விடுதலைக்கு முன்பே அவரது முதல் ! பாட்டு நூல் மலரும் உள்ளம் வந்து மகிழ்வித்தது ! ஆயிரத்திற்கும் அதிகமான அற்புதப் பாடல்கள் யாத்தவர்! அனைவரின் உதட்டிலும் உள்ளத்திலும் நின்றவர் ! தோசையம்மா தோசை ! என்று இராகம் பாடினால் ! தோசையும் அம்மாவும் மனக்கண்ணில் தோன்றும் ! அணிலே அணிலே ஓடி வா ! என்று பாடினால் போதும் ! அணிலே வந்து நின்று கேட்டு விட்டுப் போகும் ! வட்டமான தட்டு தட்டு நிறைய லட்டு என்றால் போதும் ! லட்டின் சுவை நமது நாவிற்கு வந்து போகும் ! மாம்பழமாம் மாம்பழம் ! என்று பாடினால் போதும் ! மாம்பழத்தின் சுவை மனதில் வந்துபோகும் ! பிஞ்சுகளின் உள்ளங்களில் பதியும் வண்ணம் ! பஞ்சு போன்ற மென் சொல் பாடல் வடித்தவர் ! இவர் பாடல் பாடாத குழந்தை இல்லை ! இவர் பாடல் பாடாத குழந்தை குழந்தையே இல்லை ! தமிழ்மொழி அழியாமல் காத்திட்ட காவலர் ! தமிழ்மொழி உள்ளவரை அவர் புகழ் நிலைக்கும் ! குவளயத்தில் குழந்தைகள் இருக்கும் வரை ! குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா புகழ் அழியாதப்பா ! .

கருத்துகள்