படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. : ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இப்படியும் ஒரு காதலி.. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, *மாமேதை காரல் மார்க்ஸ்சின் அன்பு காதல் மனைவி ஜென்னி இவ்வாறு கூறி உள்ளார்.. "நான் மிக வசதியான குடும்பத்தில் பிறந்தவள். ஆனால் இன்று மிகக் கொடிய வறுமையை சந்தித்து வருகிறேன். இதற்காக நான் ஒரு போதும் என்றும், வருத்தப்பட்டதே இல்லை .ஆனால் இப்போது எனக்கு இருக்கும் மிகப்பெரிய வருத்தமும், கவலையெல்லாம் " இந்த கொடிய வறுமை எனது கணவரின் சிந்தனையை, இலக்கை, எங்கே சிதைத்து விடுமோ , என்பதக்காகத்தான் வேதனைப்படுகிறேன் . * ஏன் மகன் இறந்த செய்தியை என்னிடத்தில் இத்தனை நாட்கள் சொல்லவில்லை? என அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய் இடத்தில் கேட்டார்.அதற்கு ரமா சொன்னார் . இந்த செய்தியை உங்களிடம் மறைத்ததற்கான காரணம் வேறொன்றுமில்லை... உங்களின் தொலைதூர பயணத்தை ,உங்களுடைய இலட்சியத்தை இந்த செய்தி எங்கே சிதைத்து விடுமோ என்கிற பயத்தில்தான்.. நமது மகன் இறந்த செய்தியை உங்களிடத்தில் சொல்லவில்லை என்று சொன்னார் ரமாபாய். *நாங்கள் பசியை விரட்டுவது எப்படி தெரியுமா? ஒரு நாள் பட்டினி கிடந்து..... -இன்குலாப். *அகதி முகாம் மழையில் வருகிறது மண் வாசனை... -அறிவுமதி *எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விட்டால் எங்கே போய் வாழ்வது? -ஜெயகாந்தன். *மற்றவர்கள் எப்போதாவது செய்யும் நல்லசெயல்களை, வெற்றியாளர்கள் தினமும் செய்கிறார்கள். -போலான் ரைட் மேற்கத்திய எழுத்தாளர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பகிர்வு : உரைவாள்" எ.கொ. அம்பேத்கர் . சமூக செயற்பாட்டாளர், அரூர் . தருமபுரி (மா) 9487343262

கருத்துகள்