ேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி !

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி ! இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ் இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் ! ஒளிவு மறைவு என்பது இன்றி என்றும் மனதில் பட்டதைப் பேசிய நல்லவர் ! வெட்டு ஒன்று ! துண்டு இரண்டு ! என்று விவேகமாக என்றும் பேசிய வல்லவர் ! ஆறறிவு மனிதனுக்கு அறியும் வண்ணம் ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் ! தள்ளாத வயதிலும் கொண்ட கொள்கையில் தளராமல் நின்று வென்ற கொள்கை மறவர் ! பட்டி தொட்டி எங்கும் சளைக்காமல் பயணித்து பகுத்தறிவை ஊட்டி வளர்த்திட்ட அன்னை அவர் ! மறுக்கப்பட்ட கல்வியை கேள்வி கேட்டு மறுத்தவர்களிடமிருந்து பறித்துத் தந்தவர் ! உயர் பதவிகளில் ஒப்பற்ற தமிழர்கள் உடன் அமருவதற்கு வழி வகுத்தவர் ! பெண்ணடிமை விலங்கை அடித்து உடைத்து பெண்ணுரிமைக்கு உரக்கக் குரல் கொடுத்தவர் ! இல்லாத கடவுளை இருக்கு ! என்றவர்களிடம் எங்கே காட்டு கடவுளை ! என்று கேட்டவர் ! அறியாமை இருளை அகற்றி விட்டு அறிவுச்சுடர் ஏற்றிய பகுத்தறிவுப் பகலவர் ! பெரியாரால் வாழ்க்கைப் பெற்றவர்கள் விமர்சிக்கிறார்கள் பெரியாரின் வெற்றியே ! இந்த விமர்சனமும் ! சிந்தனை விதைத்து மனிதனாக மாற்றியவர் சிந்திக்கச் சொல்லிக் கொடுத்தவர் பெரியார் ! பேச்சுரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார் ! பேசாத புழுவைப் பேசவைத்த மருத்துவர் பெரியார் ! --

கருத்துகள்