படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

தினம் ஒரு புத்தகம் திருவிழாக்கள் இறையன்பு புத்தகத் திருவிழாவில் வாங்கப்பட்ட புத்தகம். மனிதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது திருவிழாக்கள். உலகெங்கிலும் பலதரப்பட்ட வடிவங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்பதை பற்றியும், அவற்றின் பலவகையான சிறப்புகளையும், விவரிக்கிறது இந்நூல். நூலிலிருந்து மனிதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும், கற்றுக் கொண்டதால் தான் முன்னேற முடிந்தது. நெறிப்படுத்தப்பட்ட கொண்டாட்டமே திருவிழா என மாறியது. திருவிழா என்பது தொன்மை மரபோடும், புனைவியலோடும், தொடர்புபடுத்தி கூறப்பட்டதற்கு காரணம் அதில் தூய்மையும் ஆன்மீக ரீதியான உணர்வும் கலந்தால் இன்னும் சிறப்பு பெறும் என்பதால்தான். எந்த பேதமும் இல்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய வேண்டியவை நம் தேசிய திருவிழாக்கள். கடமையில் இல்லாது உரிமைகள் செல்லாது விளையாது என்பதை உணர்த்துவதே குடியரசு தினம். மேன்மையான மனிதர்கள் எவ்வாறு நம் நாட்டிற்காக பங்களித்தவர்கள் என்பதை நேர்மறையான சிந்தனையுடன் அணுக வாய்ப்பளிப்பதுது அவர்களது பிறந்த நாள் விழாக்கள். நம்மிடம் இருக்கின்ற செல்வத்தை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வதால் மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கிறது என்கின்ற மன நிலையை உருவாக்குவதே மதரீதியான பண்டிகைகளின் அடிப்படை நோக்கம். பண்டிகைகள் பகிரவும், அளவளாவுவதையும், கொண்டாடுவதையும், அளிப்பதையும், நன்றி சொல்வதையும், நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. எல்லா விழாக்களும் நம்மை இன்னும் மேன்மையானவர்கள் ஆகவும், அன்பு நிறைந்தவர்களாகவும், கடமை உணர்வு கொண்டவர்களாகவும், மனிதநேயம் உள்ளவர்களாகவும், இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்களாகவும், மாற்ற வேண்டும். அப்போதுதான் அவை உண்மையான திருவிழாக்களாக நிகழ முடியும். விழாக்களைக் கொண்டாடும் விதம், அவற்றின் நோக்கம் மற்றும் அடிப்படை காரணங்களை சொல்லும் இந்நூலில், திருவிழாக்களை கொண்டாடும்போது உண்டாகும் மகிழ்ச்சியான தருணங்களை உணரலாம். தோழமையுடன் சீனி.சந்திரசேகரன்

கருத்துகள்