படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

1.பார்க்கிற மனங்களையும் மலர வைப்பதே மலர்களின் பண்பு.கசக்குகிற கைகளும் கமகமக்கும்;நசுக்குகிறபோதும் நறுமணம்வீசும்;சிதைக்கும்போதும் வாசம் வீசும்;இவையே மலர்களின் இயல்பு. 2.இயற்கை எப்போதும் தேவையினடிப்படையில்தான் இயங்குகிறது.மலர்களே தாவரங்களின் வாரிசுகள் தொடர்வதற்கான வைப்பு நிதியங்கள். 3.மணம் இருக்கும் மலர்களில் நிறமிருப்பது குறைவு;நிறமிருந்து மணமிருந்தால் செடியின் அழகு குறைவு. 4.தாவரம் தனக்குப் பின்னும் தன் இனம் தொடரும் அவாவில்தான் பூக்களைத் தாங்குகின்றது. உலகம் பல்லுயிரின வகையில் செழித்துச் சிறக்க இயற்கை மேற்கொள்ளும் இனிய முயற்சியே மலர்கள். 5.உற்றுப் பார்த்தால் வேலிச் செடியாய் இருப்பவற்றிலும் அழகிய மலர்கள் பூத்துப் படர்கின்றன. ------ முதுமுனைவர் வெ. இறையன்பு ஐயா அவர்கள், -------"தெரிந்ததும் தெரியாததும்" எனும் நூலில்,மலர்கள் என்ற தலைப்பில்.

கருத்துகள்