தமிழால் தலைநிமிர்வோம்! - கவிஞர் இரா. இரவி

தமிழால் தலைநிமிர்வோம்! - கவிஞர் இரா. இரவி பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ்மொழி! பார் போற்றிப் பாராட்டும் மொழி தமிழ்மொழி! உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ்! உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்! காந்தியடிகள் நேசித்த திருக்குறளின் மொழி தமிழ்! காந்தியடிகள் மறுபிறவியில் தமிழனாகப் பிறக்க விரும்பினார் கீழடியின் கீழடியில் கிடைத்த மொழி தமிழ்! கீழடியில் வாழ்ந்த மனிதன் பேசிய மொழி தமிழ்! எண்ணிலடங்கா இலக்கியங்கள் உள்ள மொழி தமிழ்! எண்ணங்களை நல்வழிப்படுத்தும் செம்மை மொழி தமிழ்! செம்மொழி தகுதியைப் பெற்றிட்ட மொழி தமிழ்! செம்மொழி மாநாடுகள் கண்ட மொழி தமிழ்! உலக மொழிகள் அனைத்தின் தாய்மொழி தமிழ்! உலக மொழிகளில் எல்லாம் உள்ள சொற்கள் தமிழ்! ஆங்கில மொழியிலும் பல சொற்கள் உள்ள மொழி தமிழ் ஆங்கிலேயர்களும் விரும்பிப் பாராட்டும் மொழி தமிழ உலகம் முழுவதும் பேசப்படும் இனிமை மொழி தமிழ்! உலகில் தமிழ் ஒலிக்காத நாடில்லை எங்கும் தமிழ்! தமிழனாகப் பிறந்ததற்காக பெருமை கொள்வோம்! தமிழை தமிழாகப் பேசி தமிழைக் காப்போம்! தமிங்கிலப் பேச்சுக்கு முடிவுரை எழுதிடுவோம்! தமிழில் பிறமொழிக் கலப்பின்றி பேசிடுவோம்! நாமக்கல்லாரின் வரிகள் முற்றிலும் உண்மை நாம் தமிழன் என்பதால் தலை நிமிழ்வோம்! தமிழர் யாவரும் தமிழால் தலை நிமிர்வோம்! தமிழின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபடுவோம்!

கருத்துகள்