ஆசிரியர் ;முதுமுனைவர்.இறையன்பு, " தலைமைப் பண்புகள் "எனும் நூலில். முதல் பதிப்பு:அக்டோபர்-2020. வெளியீடு:கற்பகம் புத்தகாலயம்-044-24314347. விலை:ரூ. 220. 00.

ஆசிரியர் ;முதுமுனைவர்.இறையன்பு, " தலைமைப் பண்புகள் "எனும் நூலில். முதல் பதிப்பு:அக்டோபர்-2020. வெளியீடு:கற்பகம் புத்தகாலயம்-044-24314347. விலை:ரூ. 220. 00. 1) தலைமைப் பண்பு என்பது திடீரெனப் பூத்துக் குலுங்கிய தொங்கும் தோட்டமல்ல,அது தொன்றுதொட்டு நிலவுகிறது என்பதை மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் தெரிந்து கொள்ளலாம். (2) கூட்டமாகத் திரிகிறபோதே தலைமைப் பண்புகள் தொடங்கி விட்டன. (3)ஹோமர் எழுதிய இலியட்,ஒடிசி ஆகிய இரண்டைவிட நீளமானது மகாபாரதம். (4)கிருஷ்ணர் ஒரு புத்திசாலி மட்டுமல்ல, உத்திசாலியாகவும் திகழ்ந்தார். (5) நல்ல தலைவனின் ஆற்றல் அமைதிக் காலத்தில் வெளிப்படுவதில்லை. (6)அசோகரே இன்றும் உலக மக்களால் ஒப்பற்ற மன்னராகக் கருதப்படும் ஒருங்கிணைந்த இந்தியாவின் சக்கரவர்த்தி. (7)தலைமை என்பது பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையது (8)ரகசியங்கள் மாத்திரம் கைகளில் இருந்தால் போதாது.சிம்மாசனம் ஏறுவதற்கான படிக்கட்டுகளின் வழியும் தெரிய வேண்டும். - ****************

கருத்துகள்