28-2-2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

28-2-2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * ஒட்டுண்ணி, மாமிசப் பட்சிணி என்ன வேறுபாடு? ஒட்டுண்ணி சிறிது சிறிதாகச் சத்தை உறிஞ்சுகிறது.மாமிசப் பட்சிணி ஒரேடியாக உண்டு விடுகிறது. ஒட்டுண்ணிக்கு தான் ஒட்டும் உயிர் தொடர்வது முக்கியம்.மாமிசப் பட்சிணியை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.அதனால் தப்பிக்கவும் முயலலாம்.ஒட்டுண்ணிகள் ஒட்டுவதும் தெரியாது, உதிர்வதும் தெரியாது. மனிதர்களிலும் ஒட்டுண்ணிகள் அதிகம்.ஆனால்,அடையாளம் கண்டுகொண்ட பிறகும் அவற்றை நம்மால் உதிர்க்க முடிவதில்லை. * ரத்தம், சிறுநீர் போன்றவற்றைப் பரிசோதிக்கும் ஆய்வுக்கூடங்கள் பற்றி...? மலத்தைப் பரிசோதிக்கும்போதும் மலரைப் பரிசோதிக்கும் ஒரே மனநிலையோடு இருக்கும் மகான்கள் அவர்கள். * 'பணக்காரர்' என்று ஒருவரை அழைத்தால் மறுக்கிற சிலர்,'புத்திசாலி' என்று புகழ்ந்தால் அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்களே, ஏன்? இருப்பதைத்தானே மறுக்க முடியும்!

கருத்துகள்