டாக்டர்.வெ.இறையன்பு ஐயா எழுதிய "கேள்வியும் நானே பதிலும் நானே" நூலில் வியக்கத்தக்க வரிகள் ...

 டாக்டர்.வெ.இறையன்பு ஐயா எழுதிய "கேள்வியும் நானே பதிலும் நானே" நூலில் வியக்கத்தக்க வரிகள் ......

* கோபம் அழகாக இருக்க முடியுமா ?
குழந்தைகளின் கோபமும், அப்போது காட்டும் முகபாவமும் அழகாக இருக்கின்றன. அவர்கள் உதிர்க்கிற சொற்கள் இசையாகின்றன. அழகிய மலர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்து நம் மீது விழுந்தாலும் காயம்    உண்டாவதில்லை.
* கிராமப்புற--நகர்ப்புற மாணவர்களிடம் உள்ள வித்தியாசம் ?
பசி ஏப்பத்துக்கும்,புளி ஏப்பத்துக்கும் உள்ள ஏற்பாடு.
* வாழ்க்கையின் விசித்திரம் என்ன ?
மகத்தான நிகழ்வுகள் தாமாகவே மலர்கின்றன. மலினமானவற்றில் மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறோம்.
* விடியும்போது என்ன நினைத்துக்கொண்டு எழுவீர்கள் ?
"சிரிப்பதற்கும், வாசிப்பதற்கும், சிலருக்கு உதவுவதற்கும் இன்னொரு நாள் கிடைத்திருக்கிறது" என்ற மகிழ்ச்சியோடு எழுவேன்.
* கல்வியின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் ?
நம்மை நமக்கே முழுமையாக உணர்த்துவதே உண்மையான கல்வி.

கருத்துகள்