டாக்டர்.வெ.இறையன்பு ஐயா எழுதிய "கேள்வியும் நானே பதிலும் நானே" நூலில் வியக்கத்தக்க வரிகள் .....

 


 டாக்டர்.வெ.இறையன்பு ஐயா எழுதிய "கேள்வியும் நானே பதிலும் நானே" நூலில் வியக்கத்தக்க வரிகள் ......

* "யோகா" போன்ற பயிற்சியின் உண்மையான நோக்கம் என்ன ?
உடலின் வழியாக மனத்தைக் கடந்து செல்ல கற்றுக் கொள்வது. அவை தசைகளை மட்டுமல்ல... வாழ்வையே நெறிப்படுத்த உதவும் பக்குவப் பயிற்சிகள். 
* உலகத்தில் எது கடும் பாரமானது?
"ஷோலே"இந்திப் படத்தில் வருகிற ஒரு வசனம்; "தந்தையின் முதுகில் இருக்கும் மகனின் சவம்.... உலகத்திலேயே அதிக பாரமானது!"
* இன்றைய மாணவர்கள் மனநிலை எவ்வாறானது?
அவர்கள் கேட்பதைவிட பேசுவதில் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். சிலரோ நிஜங்களைவிட நிழல்களையே அதிகம் நேசிக்கிறார்கள்.



கருத்துகள்