இனிய இறையன்பு..."என்ற நூலில் கேட்கப்பட்ட விதவிதமான கேள்விகளுக்கு முனைவர்.வெ.இறையன்பு ஐயா அவர்களால்,மிக மிக உன்னத தலைமைப் பண்புகளையும் மேம்பட்ட எண்ணங்களையும் வெளிப்படுத்துகிற விடைகள் !

 



இனிய இறையன்பு..."என்ற நூலில்

கேட்கப்பட்ட  

விதவிதமான கேள்விகளுக்கு முனைவர்.வெ.இறையன்பு ஐயா அவர்களால்,மிக மிக உன்னத தலைமைப் பண்புகளையும் மேம்பட்ட எண்ணங்களையும் வெளிப்படுத்துகிற விடைகள் !

1.தாங்கள் எழுதிய நூல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எது ?

* பிடித்த நூலை எழுதுவதற்கான முயற்சிகள்தான் இதுவரை எழுதிய நூல்கள். 

2. நான் உங்களை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறேன். வாய்ப்பு தருவீர்களேயானால் மிக மகிழ்ச்சியடைவேன் அய்யா. 

* நீங்க நல்லவரா ? கெட்டவரா ? 

3.திரைப்படத்தில் நடிப்பதற்கு தங்களுக்கு வாய்ப்புகள் வந்ததா ?

* பல படங்களில் பிள்ளையார் வேடத்தில் நடிக்கக் கூப்பிட்டார்கள். 

4. சார், இறையன்பு என்பது பிறந்தவுடன் பெற்றோர் வைத்த பெயரா, இல்லை இடையில் சூட்டப்பட்ட பெயரா ? தெளிவாகக் கூறுங்கள். 

* இயற்பெயர்தான் இறையன்பு.அதைக் காரணப் பெயராக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

5. சலிப்புத்தட்டும் தருணத்தினை எங்கனம் சமாளிக்கிறீர்கள் ?

* இனிய இறையன்பு பகுதியை எழுதத் தொடங்குகிறேன்.

6.எந்த மொழிக்கு தனித்தன்மை உண்டு?

* தனித்தன்மை இருப்பதால்தான் அது இன்னொரு மொழியாக இருக்கிறது. 

7. நான் கண்டிப்பாக கலெக்டர் ஆகிவிடுவேன்.அப்போ நீங்க என் கல்யாணத்துக்கு சிறப்பு விருந்தினராக வருவீர்களா.?

* கண்டிப்பான கலெக்டராக ஆகாதீர்கள்,கனிவான கலெக்டர் ஆகுங்கள். நீங்கள் அழைத்தால் அவசியம் வருவேன்.அதிகாரிகளின் திருமணங்களுக்குச் செல்லும் நிகழ்வுகளைவிட மற்றவர்கள் திருமணங்களுக்குச் சென்ற நேர்வுகளே அதிகம்.

கருத்துகள்