கவிஞர் இரா. இரவி. அவர்களின் கவிக்கு கவிபூக்கள்.!.செல்வி இர. ஜெயப்பிரியங்கா, திண்டுக்கல்






கவிஞர் இரா. இரவி. அவர்களின் கவிக்கு
கவிபூக்கள்.!.
ஐயா அவர்கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழில் 2015-ல் எழுதிய கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னை கவிதை எழுத ஊக்கப்படுத்தியது.
கவிதை உலகை எனக்கு அறிமுகம் செய்தவர் ஐயா அவர்கள். அக்கட்டுரை இல்லை எனில் என் எழுதுகோல், கவிதையே எழுதி இருக்காது.
ஐயா வர்களின் கவிபயணம் 
கவிதைசாரலில் தொடங்கி!
ஹைகூவாக ரிணமித்து.
விழிகளில் பட்டு!
உள்ளத்தில் உள்ளிறுத்தி!
நெஞ்சத்தில் நின்று!
இதயத்தில் இடம்பெற்று!
கவிவிதை விருட்சமாய்!
மனதில் மகுடமாய்!
ஹைகூப் படைப்பாளர்;களை ஆற்றுப்படுத்தி!
புத்தகங்களை புத்தகம் மூலம் போற்றி!
கவிசாரல் கவிஅமுதமாகி!
குறள்வழி முதற்றே உலகாகி!
கவிவிதை வெளிச்ச வானமாய்!
உலாவாக வலம் வந்து!
கவிஅமுதம் கவிசுவையாகி!
நூறு ஐந்து ஹைகூவாகி!
நூலின் சாரம் இனிய சாறான............
இறையன்பு கருவூலம்
இலக்கிய இணையர் படைப்புலகமாக மலர்;ந்துள்ளது.!
ஐயா அவர்களின் கவிபயணம் தொடர வாழ்த்த வயதில்லை வணக்கங்களுடன் இந்த குறுந்தொகை........
செல்வி இர. ஜெயப்பிரியங்காதிண்டுக்கல்

கருத்துகள்

கருத்துரையிடுக