கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி, தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.




கவிச்சுவை!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி,
தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி. 
 
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, 
தியாகராய நகர்,  சென்னை-600 017 
. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : 
vanathipathippakam@gmail.com

*******
      தமிழன் என்று சொல்லடா!  தலை நிமிர்ந்து நில்லடா!! என்ற வரிகள் கவிஞர் இரா.இரவிக்கு சாலப் பொருந்தும். கவிச்சுவை என்ற கவிதை நூலில் இடம்பெறும் ஒவ்வொரு கவிதையும் சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்த்து. காந்திக்கு ஒரு கடிதம் என்ற முதல் கவிதையே சமூகத்திற்கு சாட்டையடி கொடுக்கும் வரிகள் ஏராளம்.

      தியாகமற்ற வழிபாடு வேண்டாம் என்றாய்
      திரும்பிய பக்கமெல்லாம் வழிபாடு வியாபாரமானது!

என்ற வரிகள் போற்றத்தக்கது. இன்று இறைவனை சந்திக்க கோயிலுக்கு சென்றால் கூட பணம் அவசியம் என்பதை அப்பட்டமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

      பெண்ணுரிமை பேச்சு அளவிலேயே உள்ளது
      பிறக்க உரிமை இல்லாத அவல நிலையே!

என்ற வரிகள் சமூக அவலத்தின் வெளிப்பாடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

      33 சதவீத இட ஒதுக்கீடு பெண்கள் பெற்றாலும், ஏதோ ஒரு மூலையில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை நல்லதோர் வீணை! என்ற தலைப்பில் இடம்பெறும் ஒவ்வொரு கவிதை வரிகளும் சுட்டிக் காட்டுகின்றன.

      தமிழின் பெருமையை கவிஞர் இரா.இரவியைத் தவிர வேறு எவராலும் சுட்டிக்காட்ட முடியாது.

      தமிழின் ஆளுமையை உலகம் அறிந்தது
      தமிழின் ஆளுமையை தமிழன் அறியவில்லை.

என்பது நிதர்சனம். அண்மையில் ஆஸ்திரேலியா தமிழை தேசிய மொழியாக அறிவித்துள்ளது. தமிழன் மட்டும் தான் தமிழை மதிக்கத் தவறியவன் என்பதை இவர் கவிதை வரிகள் நம்மை அழமாக உற்றுநோக்க வைக்கின்றது.  சமூக அவலத்திற்கானத் தீர்வுகள், பெண்மையைப் போற்றுதல், விழிப்புணர்வு சிந்தனைகள் ஆகியவை கவிஞர் இரா. இரவியின் கவிதைகளில் ஏராளம். கவிஞர் இரா.இரவி நம் சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள்