தந்தி தொலைக்காட்சியில் 18.5.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி

https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/05/18203505/1035879/payanagalmudivathilai.vpf 

தந்தி தொலைக்காட்சியில் 18.5.2019 ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி  
--
கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களின் அறிவார்ந்த "பயணங்கள் முடிவதில்லை " உரை கேட்டேன்  

.மனித  இனத்தில் பிறக்கும் குழந்தை ஆணா ?  பெண்ணா ?  என்று முடிவு செய்வது  ஆணைச் சார்ந்ததே என்பது அறிவியல் உண்மை. இதனைக் குறிப்பிட்டார்கள் .இந்த உண்மை அறியாத சில ஆண்கள் பெண் குழந்தை பெற்றதற்காக  மனைவியை குறை சொல்பவர்களும் உண்டு .இனியாவது அவர்கள் திருந்த வேண்டும் .

பறவையினத்தில்  பிறக்கும் பறவை  ஆணா ?  பெண்ணா ?  என்று முடிவு செய்வது பெண் பார்வையைச் சார்ந்தது .இது நாம் அறியாத   ஒன்று .அறிந்திட வியப்பாக இருந்தது .புதிய செய்தி .பாராட்டுக்கள்
சேவல் சண்டை பற்றி ஒரு கதை சொன்னார்கள் . உடலை நன்கு தேற்றி வந்து ஆளுமையோடு நிற்கும் சேவலிடம் சண்டைக்கு வர மற்ற சேவல்கள் அஞ்சின .இக்கதை தோற்றம் முக்கியம் என்பதை உணர்த்தியது .

குயில்கள்  ஒரே மாதிரி பாடும்  .வானம்பாடிகள் வெவ்வேறு  மாதிரி பாடும். குயில் குஞ்சாக இருக்கும்போது படுவதில்லை .ஹார்மோன் வந்தபின் குறிப்பிட்ட பருவம் வந்தபின்னே பாடும் .மற்ற குயில்கள் பாடுவதைக் கேட்டுப் பாடும் .

பறவைகள்  இனப்பெருக்கத்திற்காகப் பாடும் .பெண் பறவைக்கு தன் இருப்பை தெரிவிக்க ஆண் பறவை பாடும் .சில பறவைகள் மிமிக்கிரி செய்யும் .சில பறவைகள் மகிழுந்து போல கூட சத்தமிடும் இப்படி பறவைகள் பற்றி பல அறியாத புதிய தகவல்கள் அறிய முடிந்தது .

காகம் இனம் பெருகினால் மற்ற சிறு பறவைகளை அழித்துவிடும். குயிலுக்கு அடை காக்க தெரியாது என்பதால் .காகம் இல்லாதபோது குயில் தன் முட்டைகளை  காகத்தின் கூட்டில் வைத்துவிடும் .குஞ்சு பொரிந்து வளரும்போது குயில் என்று தெரிந்தவுடன் மற்ற காகங்கள் குயில் குஞ்சை  கொத்த வரும்போது .அடைகாத்த காகம் குயிலை காப்பாற்றுமாம் .அடை  காத்த பாசத்திற்காக .இதனை கேள்விப்பட்ட போது நெகிழ்சியாக இருந்தது .காகத்தின் பாசம் போற்றத் தக்கது .

பறவைகளை காட்சிப்படுத்திய விதம் அருமை .பறவைகளின் பேச்சு ,பாடல் அருமை .

மொத்தத்தில் மனிதன் விமானம் கண்டுபிடிக்க காரணமாக இருந்த பறவையினம் பற்றி பல்வேறு தகவல் அறிந்திட வாய்ப்பாக இருந்தது .பாராட்டுக்கள் .நல்ல நிகழ்ச்சி தொடரட்டும் .வாழ்த்துக்கள் .

கருத்துகள்