வெள்ளி, 4 ஜனவரி, 2019

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு. உன் விழிகளில் ! கவிஞர் இரா .இரவி !
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு.

 உன் விழிகளில் ! கவிஞர் இரா .இரவி !

உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் நான்
உச்சியில் பறக்கிறேன் உணர்ச்சியில் மிதக்கிறேன் !

என்னையே நான் விரும்புகின்றேன் பின்
உன்னையும் நான் விரும்புகின்றேன் !

உடலால் நான் எங்கு இருந்தபோதும்
உள்ளத்தால் உன்னிடமே இருக்கின்றேன் !

விழி மூடினால் கனவில் வருகிறாய்
விழி திறந்தால் நினைவில் வருகிறாய் !

என்னுள் புகுந்து என்னை இயக்குகின்றாய்
என்னை எனக்கு எடுத்து இயம்பினாய் !

மறக்கலாம் என்று நினைத்ததாலும் முடிவதில்லை
மனம் முழுவதும் உன்னைய ஆக்கிரமிப்பு !

எல்லை கடந்த பயங்கரவாதம் உன் பார்வை
என்னை ஏதோ ஏதோ செய்து விடுகிறாய் !

காந்தம் தோற்கின்றது உந்தன் கண்களிடம்
கவர்ந்து இழுத்து யுத்தம் செய்கின்றாய் !
.
உன் விழிகளில் என் முகம் பார்த்தேன்
என் உள்ளத்தில் உன் முகம் பதித்தேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது