ஞாயிறு, 6 ஜனவரி, 2019

தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க! வாழ்க! கவிஞர் இரா. இரவி.
தமிழ்த்தேனீ 
இரா  .மோகன் ஐயா வாழ்க! வாழ்க!
கவிஞர் இரா. இரவி.
******
விரல் விட்டு எண்ணும் அளவில் உள்ள
வாழ்கின்ற தமிழறிஞர்களில் ஒருவர் நல்லவர்!

உடலின் நிறம் மட்டும் வெள்ளை அன்று
உள்ளத்தின் நிறமும் வெண்மையோ வெண்மை!

ஏற்றிவிடும் ஏணியாக இருந்தவர் பலருக்கு
எந்தன் உயர்வுக்கு காரணியாக இருப்பவர்!

அன்பு செலுத்துவதில் அனைவருக்கும் தாயுமானவர்
அதிர்ந்து யாரிடமும் பேசிடாத பண்பாளர்!

சங்க இலக்கியப் பலாவை சுளையாக வழங்குபவர்
சகோதர உணர்வுடன் அனைவருடனும் பழகுபவர்!

புன்னகை மன்னராக பூமியில் வலம் வருபவர்
பண்பைப் பயிற்றுவிக்கும் வாழ்நாள் பேராசிரியர்!

பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவர்
பேச்சு எழுத்து இரண்டிலும் சிகரம் தொட்டவர்!

நண்பர்கள் நிறைய உண்டு பகைவர் இல்லவே இல்லை
நல்லதை நினைத்து நல்லதையே நாளும் பேசுபவர்!

உடன்பாட்டுச் சிந்தனையில் உச்சம் தொட்டவர்
உழைப்பின் உன்னதத்தால் உயர்ந்து பிறரையும் உயர்த்துபவர்!

அறிஞர் அண்ணாவைப் போல அறிவால் உயர்ந்தவர்
ஆளுமைத் திறன் மிக்கவர் இனிமையாய் பேசுபவர்!

நூல்கள் எழுதுவதோடு நின்றுவிடாமல் மற்ற
நண்பர்களும் நூல் எழுதி வெளியிட துணை நிற்பவர்!

வள்ளுவர் கூற்றுப் போல வாழ்வாங்கு வாழ்பவர்
வாயில் மோகனப் புன்னகை அணிந்தே இருப்பவர்!

பட்டிமன்றத்தில் பாங்குறப் பேசி கேட்பவர்களை
பரவசப்படுத்தி உள்ளத்தைக் கொள்ளை அடிப்பவர்!

வெற்றி பெற்ற ஆணிற்குபின் பெண் நிற்கிறாள் பொன்மொழி
வெற்றிப்பெற்ற மோகன் அய்யாவிற்கு முன்நிற்கிறார் நிர்மலா மோகன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது