கவிச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் !







கவிச்சுவை! (புதுக்கவிதைகள்)

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!

நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் !

ஆசிரியர்  : “கவிதை உறவு - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
மலர் 31, இதழ் 10, நவம்பர் 2018
420
-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600   
பக்கம் 186.விலை ரூபாய் 120.வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, 
தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : 
vanathipathippakam@gmail.com

040.
******
அளவிற்சிறிய அடிகளில் குறைந்த, ஆனால் ஆற்றல் மிகுந்த கவிதை வடிவமாகத் திகழ்வது ஹைக்கூ வடிவம்.  நமது திருக்குறள் போலவே தேசமெங்கும் வரவேற்பைப் பெற்றிருக்கிற சிறந்த வடிவம் இது.  ஹைக்கூ வரிகள் குறைவாக இருப்பது போலவே இந்த வடிவில் எழுதுகிற கவிஞர்களும் தமிழில் குறைவாகவே இருக்கிறார்கள்.  அந்த ஒரு சிலருள் சிறந்த வரிசைக் கவிஞராக வலம் வருபவர் கவிஞர் இரா. இரவி அவர்கள். 

 அவரை ஹைக்கூ இரவி என்று கூட தமிழ் கூறும் நல்லுலகம் அழைத்துப் பெருமைப்படுத்துகிறது.  முன்னம் வெளிவந்த இவரது கவிதை நூல்களைப் போலவே இக்கவிச்சுவையும் சுவையாக இருக்கிறது.  பொதுவாகவே கவிஞர் இரவியின் கவிதைகளில் தன்னம்பிக்கைச் சிந்தனைகளும் மிகுந்திருக்கும்.  மொழியுணர்வுக் கவிதைகளும் அங்கங்கே தூவப்பட்டிருக்கும்.  இத்தொகுதியும் அவ்வாறே அமைந்துள்ளது.  

கவிஞர் இரவி அவர்கள் தம் கவிதைகளை 7 பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பரிமாறியிருக்கிறார்.  முதலில் வருவது சான்றோர் உலகு. போற்றுதற்குரியோரைப் பாடி மகிழ்ந்திருக்-கிறார்.  முதல் மகிழ்ச்சியே மகாத்மா காந்தி தான்.  “அண்ணலே மீண்டும் வர வேண்டாம் என்று அச்சுறுத்தும் இரவி ஏனென்றும் விளக்கியிருக்கிறார். 

 காந்தி செய்யக்கூடாதென்ற 7 பாவங்களையும் செய்வோர் நடுவே, அவர் ஏன் வரக்கூடாது என்பதை அவரது கருத்து “பணத்தாளில் மட்டும் உன் பணத்தை அச்சடித்துவிட்டு பாரதத்தில் தந்தை உன்னை மறந்து விட்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் கவிஞர் இரவி. 

 “குழந்தையைப் போல உள்ளம் கொண்டால் குவலயத்தில் ஆகலாம் கலாம் என்பன போன்ற வரிகளில் ‘ஆகலாம் கலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறார் கவிஞர் இரவி.  
கர்ம வீரர் காமராசர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., பாவேந்தர், தமிழண்ணல், நன்னன், கவிக்கோ, ஸ்டீபன் ஹாக்கின்ஸ், அன்னை தெரசா என்று பெருமக்கள் பலருக்குப் போற்றிகள் படைத்துள்ளதும் அருமை.  தேமதுரத் தமிழோசை தமிழகத்தில் ஒலிக்கட்டும் என்று ஒரு கவிதை, அதில், “தமிழ் எனக்குச் சரியாக வராது என்போர் தடுக்கி விழுந்தாலும் ‘அம்மா என்பார்கள் என்கிற இரவி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். 

 “பயிர் வளர்த்திட களை எடுத்திட வேண்டும். பைந்தமிழ் வளர்த்திட பிறசொல் நீக்கிட வேண்டும் என்று எளிய தமிழில் தன் இதயக் குமுறலை வெளிப்படுத்திகிறார் கவிஞர்.  தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றுதான் பாவேந்தர் பாடியுள்ளார். கவிஞர் இரவி “தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்று ஒருபடி அதிகம் போகிறார். 

 உறவுகளில் உன்னதம் தலைப்பில் உறவுகளை உயர்த்திப் பிடிக்கிறார் கவிஞர் “மனதில் பட்டதை அச்சமின்றி உரைக்கும் மண்ணில் வாழும் தேவதை குழந்தை என்கிறார்.  இது குழந்தைகளை கௌரவப்படுத்தும் வரிகள். நிறைவாக எது கவிதை என்பதற்கு அவரே தரும் விளக்கம் அருமை. 

 “எது கவிதை என்ற கேள்விகள் தொடர்ந்தாலும், எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுகிறதோ, அதுவே கவிதை என்கிறார் அவர்.  வாசிக்கும் நம் உள்ளத்தை வசீகரிக்கும் வரிகள் கவிஞர் இரவி வழங்கியவை என்பதால், இதுவே கவிதை என்று எல்லாக் கவிதைகளையும் பாராட்டலாம்.

கருத்துகள்